ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்.. 5 வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே.. அணி எப்படி இருக்கு ?

0
1665


ஐபிஎல் தொடரை மையமாக வைத்து, தென்னாப்பிரிக்காவிலும் புதிய டி20 தொடர் வரும் ஜனவரி மாதம் மூலம் தொடங்க உள்ளது. இதற்கான அணிகளை, ஐபிஎல் மார்க்கெட்டில் உள்ள அணி உரிமையாளர்களிடமே ஏலத்தில் நடத்தி, 6 அணிகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விற்றது. இதன் மூலம், ஐபிஎல் அணிகளின் பெயர் மற்றும் உரிமையாளர்கள், சீனுக்கு வந்தால் அதன் மதிப்பே அதிகம்.

மேலும் இந்திய ரசிகர்களையும் எளிதில் சென்று அடையும்.
இதை வைத்து காய் நகர்த்திய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கிட்டதட்ட தனது கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி நிர்வாகிகள் தற்போது 6 அணிகளையும் வாங்கிவிட்டது. மேலும், இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு மூன்றரை கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என்று விலை நிர்ணயம் செய்ய, நட்சத்திர வீரர்கள் பலர் இந்த தொடரில் விளையாட பெயர் கொடுத்துள்ளனர்.

தற்போது, இதில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்யலாம்.அதில் ஒரு சர்வதேச தென்னாப்பிரிக்கா வீரரும், ஒரு உள்ளூர் தென்னாப்பிரிக்க வீரரும் அடங்குவார்கள். மற்ற இரண்டு வீரர்கள் வெவ்வேறு நாட்டுச் சேர்ந்த வீரர்கள் ஆக இருக்க வேண்டும். இந்த விதியின்படி தற்போது சிஎஸ்கே அணி 5 வீரர்களை தேர்வு செய்துள்ளது. முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஆர்சிபி கேப்டனாக இருக்கும் டுபிளசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது வீரராக மொயின் அலியும், மூன்றாவது வீரராக இலங்கை வீரர் திக்சனாவையும், 4வது வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமியோ செபர்டையும், 5வது வீரராக தென்னாப்பிரிக்க உள்ளூர் வீரர் ஜெரால்ட் கோஸ்ட்லியையும் சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது.


இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு அனுபவம் வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனும், கேப்டனும் டுபிளஸிஸ் ரூபத்தில் கிடைத்துவிட்டது. இதே போன்று மொயின் அலி போல் ஒரு ஆல்ரவுண்டரும், தீக்சனா போல் ஒரு சுழற்பந்துவீச்சாளரும் கிடைத்துவிட்டனர். இதே போன்று இரண்டு ஆல்ரவுண்டர்களான கோட்ஸியும், ரோமியோ செஃபர்டும் சிஎஸ்கே அணி தேர்வு செய்துவிட்டது. தற்போது சிஎஸ்கே அணிக்கு தேவை பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். இது வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஏலம் மூலம் சிஎஸ்கே தேர்வு செய்துவிடும்.