ஐபிஎல் 2024.. ரகானேவுக்கு சிஎஸ்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா?.. முழு அலசல்

0
5849
Dhoni

உலக டி20 லீக் கிரிக்கெட்டில், வெற்றிகரமான ஒரு அணியை அமைப்பதற்கு, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அவர்களுடைய பேட்டிங் யூனிட்டை மிக வலிமையாக ஆல்ரவுண்டர்களைக் கொண்டு நிரப்பும். சராசரியான பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு போதுமானவர்கள்.

- Advertisement -

மேலும் அவர்கள் அணிக்குள் கொண்டு வரும் வீரர்கள் பெரும்பாலானவர்கள் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்காது.

அவர்களுடைய இந்த அணி அமைப்பு முறையை மும்பை இந்தியன்ஸ் அணி அமைப்பு முறைக்கு நேர் எதிரானது. ஆனால் இந்த இரண்டு அணி நிர்வாகங்களில் அணி அமைப்பு முறைதான், மிகப்பெரிய வெற்றி அடைந்த பாணியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளின் வருகை, அனுபவம் கொண்ட வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திறமையான இளம் வீரர்கள் பக்கம் இந்த முறை ஏலத்தில் திரும்பி இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் நடந்து முடிந்த ஏலத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான சமீர் ரிஸ்வி என்ற வலது கை இளம் பேட்ஸ்மேனுக்கு எட்டு கோடி கொடுத்து வாங்கி ஆச்சரியப்படுத்தியது.

இந்த இளம்வீரரை பொறுத்தவரை அம்பதி ராயுடுவின் இடத்துக்கு சரியானவர். அவரைப் போலவே வலது கை இந்திய வீரர். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்கள் எல்லாம் சுரேஷ் ரெய்னாவை போல. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னாவின் இடங்களை நிரப்ப ஒரே வீரராக கிடைத்திருக்கிறார்.

எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் முடிந்ததும் மெகா ஏலம் நடைபெறுவதாக இருந்தால், இந்த இளம் வீரரை தக்க வைப்பதா அல்லது விட்டுவிடுவதா? என்பதை முடிவு செய்ய, இவருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுத்து பார்த்தாக வேண்டும். இவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால் அது ரகானாவின் இடத்தில் அமையும்.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரகானேவை சில ஆட்டங்களில் பயன்படுத்திவிட்டு, இந்த இளம் வீரரை தேவையான அளவு பரிசோதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரகானேவுக்கு இந்த வருடம் குறைந்த வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் அவருக்கு இதுவே சிஎஸ்கேவில் கடைசி ஆண்டாகவும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது!