ட்ரெஸ்ஸிங் ரூம் டாய்லெட்டில் அழுது விட்டுப் போக வேண்டியதுதான் ; மன்னித்து விடுங்கள் ராகுல் – தினேஷ் கார்த்திக் கே.எல்.ராகுல் குறித்து உருக்கமான பேச்சு!

0
7215
DK

இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் தடுப்பு சுவர் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவை எல்லோரும் கூறுவார்கள். ஆனால் உண்மையில் ராகுல் டிராவிட்டின் மறுபதிப்பு அவரின் கர்நாடகத்தைச் சேர்ந்த கே.எல்.ராகுல்தான்!

கே.எல்.ராகுல் தரமுடைய அற்புதமான வலது கை பேட்ஸ்மேன் மட்டும் அல்ல, அணிக்காக எந்த இடத்திலும் விளையாட முடிந்தவர். அதேபோல் கீப்பிங் செய்ய சொன்னால் செய்வார் கேப்டன்சி கொடுத்தாலும் செய்வார். இதையெல்லாம் மீண்டும் திரும்ப பெற்றுக் கொண்டாலும் அமைதியாக பழைய இடத்திலிருந்து அணியில் தொடர்வார். இப்படி ராகுல் டிராவிட் தான் விளையாடிய காலத்தில் இந்திய அணியில் என்னவெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் அப்படியே திரும்ப செய்பவராக கேஎல் ராகுல் தற்காலத்தில் இருக்கிறார்!

- Advertisement -

எல்லா திறமை இருந்தும் சரியான மனத்தின்மை இல்லாத காரணத்தால் அவர் ஆட்டத்தை எப்படி துவங்குவது என்று புரியாமல் தடுமாறி அழுத்தத்தில் ஆட்டம் இழப்பதோடு அணியையும் அழுத்தத்திற்குள் தள்ளுகிறார். அவர் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 8,12,10,22,23,10,2,20,17,1 என மிகச் சுமாரான செயல்பாட்டையே கொண்டு இருந்தார்.

தற்பொழுது இந்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர் கவாஸ்கர் தொடரில் அடுத்து விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளுக்கான அணியை அறிவித்த பொழுது, கேஎல் ராகுலுக்கு வழங்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற மாட்டார் என்பது ஏறக்குறைய முடிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” அடுத்த போட்டியில் இருந்து ராகுல் வெளியேற்றப்படுகிறார் என்றால் அது கடந்த போட்டியால் மட்டும் அல்ல, கடந்த ஐந்தாறு போட்டிகளில் அவர் செயல்பட்ட விதத்தினால்தான் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு கிளாஸ் பிளேயர் எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் திறமையான பேட்ஸ்மேன். தற்பொழுது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை என்பது பேட்டிங் டெக்னிக் சார்ந்தது அல்ல. இது மனநிலை சார்ந்தது. அவருக்கு தற்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் கிரிக்கெட் பலமாக திரும்பி வாங்க ராகுல்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் ” இது ஒரு தொழில் முறை உலகம். இப்படியான சோகமான தருணங்களை நீங்கள் சமாளிக்க வேண்டும். இப்படியான சூழ்நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூம் டாய்லெட்டில் இரண்டு கண்ணீர் துளிகளை சென்று விட்டு வெளியேறி வந்து செயல்பட வேண்டியதுதான். எனக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டு. ஆனால் ஒருபோதும் இது இனிமையான உணர்வு அல்ல. தற்போது நாம் கில் உடன் செல்ல வேண்டும். அவர் சிறப்பாக விளையாடுகிறார். மூன்றாவது போட்டியில் ராகுலுக்கு பதில் ஒரு மாற்றம் இருக்கும். அவர் தற்பொழுது ஸ்கேனரில் இருக்கிறார். ஆனால் ஒன்று கே எல் ராகுல் வலிமையாக திரும்பி வருவார். வலது கை பேட்டிங்கில் அவரைப் போன்ற தரம் வீச்சு பல பேருக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார்!