“என்னை விமர்சனம் பண்ணிக்கோங்க.. 2011 உலக கோப்பை டீம விட இந்த இந்திய டீம்தான் பெஸ்ட்!” – தமிழக வீரர் பரபரப்பு பேச்சு!

0
691
ICT

இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது!

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அந்த அணியை 191 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, இலக்கை 30.3 ஓவர்களில் எட்டி அதிரடியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சு உலகத் தரத்தில் அமைந்திருக்கிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் இணைந்து சிறப்பான ஒரு பார்ட்னர்ஷிப்பை பொறுமையாக கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவரை வெளியேற்றியதும் மொத்தமாக ஆஸ்திரேலியா அணியை இந்தியா 199 ரன்களுக்கு சுருட்டி விட்டது.

இதேபோல் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளும் மற்றும் சிறிய மைதானமான டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 40 ஓவர்களுக்கு மேல் வந்து பும்ரா ஒட்டுமொத்தமாக முடக்கி போட்டார். அதே சமயத்தில் பேட்டிங்கில் திரும்ப வந்து அதிரடியாக இந்தியா வென்றது.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் 155 ரன்கள் இரண்டு விக்கெட் என பாகிஸ்தான் நல்ல நிலையிலே இருந்தது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தார்கள்.

இதுகுறித்து தமிழக வீரரான மற்றும் தொலைக்காட்சி கிரிக்கெட் வர்ணனையாளரான நானி கூறும்பொழுது ” நான் சொல்கின்ற கருத்து விமர்சனமாகக் கூட மாறும். ஆனாலும் சொல்கிறேன். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விட, தற்போதைய இந்திய அணிதான் மிக பலமாக இருக்கிறது.

கடந்த உலகக்கோப்பையில் லீக் சுற்றில் தோல்விகள் கூட வந்தது. ஆனால் தற்போதைய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த அணியில் இல்லாத ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி மட்டுமே. அவரிடம் இந்த அணியை கொடுத்தால் ஒன் சைடு ஆக எதிரணிகளை முடித்து விடுவார்!” என்று கூறியிருக்கிறார்!