“2இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது.. ஆனாலும் தோனி இருக்கிறார்” – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

0
177
Dhoni

இந்திய கிரிக்கெட் ஏறக்குறைய மூன்று வடிவங்களிலும் புது வீரர்களை கொண்டு புது அணிகளை உருவாக்கி பயணிப்பதற்கு மிக வேகமாக வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

இந்த வகையில் முதலில் டி20 இந்திய அணியில் மாற்றங்கள் வெகு வேகமாக செய்யப்பட்டன. ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய வீரர்கள் நிறைய உள்வாங்கப்பட்டு புதிய அணி உருவாக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது மீண்டும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கொண்டுவரப்பட்டு பழைய இடத்திலேயே நிற்கிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் அதிரடியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாய் சுதர்சன் மற்றும் ரஜத் பட்டிதார் ஆகியோர் இந்திய அணிக்குள் உள்வாங்கப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டார்கள்.

இந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியும் புதிதாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் கேஎல் ராகுல் முழு நேர விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டார். மேலும் துணை கேப்டனாக இருந்த ரகானே அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் புஜாராவை தொடர்ச்சியாக தேர்வு செய்யப்படாமல் இருப்பது தொடர்ந்தது.

ரகானே மற்றும் புஜாரா இருவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. அவர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடி வந்தார்கள். இதில் புஜாரா உள்நாட்டு கிரிக்கெட்டில் மனம் தளராமல் விளையாடி இரட்டை சதம் அடித்துக் கொண்டிருக்க, ரகானே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும்பொழுது “இந்திய டெஸ்ட் அணி எதிர்ப்பார்த்த வரிசையில் அமைந்திருக்கிறது. ரகானே மற்றும் புஜாரா இருவரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தோம் அதுவே நடந்திருக்கிறது. அவர்கள் இருவரது சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது. அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தென் ஆப்பிரிக்க தொடர் மட்டுமே ஒரு வாய்ப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்க தொடரில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத பொழுதே அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

அதே சமயத்தில் ரகானேவின் ஐபிஎல் வாழ்க்கை உயிருடன் உள்ளது. ஐபிஎல் தொடருக்கு ரகானே கொஞ்சம் பொருத்தமான வீரராக இருப்பார். ஏனென்றால் நீங்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பொழுதெல்லாம் கவனத்திற்கு வருவீர்கள். சென்னையில் விளையாடுவதை விட சென்னை அணிக்காக விளையாடுவது முக்கியம். ஏனென்றால் சென்னை அணியில் தோனி இருக்கிறார். எனவே உங்களுக்கு எப்பொழுதும் ஒரு வாய்ப்பு உண்டு” என்று கூறி இருக்கிறார்!