கிரிக்கெட் வீரர்கள் மனமுடைந்து மைதானத்தில் வைத்து கண்ணீர் விட்ட 5 தருணங்கள்

0
2359
Morkel and Kohli

கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரும் வெற்றி அடையும் நிலையில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதே சமயம் ஒரு சில நேரங்களில் அவர்கள் எதிர்பார்க்காத தோல்வி வரும் வேளையில், மனமுடைந்து மைதானத்தில் கண்ணீர் விட்ட சில சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

மனதளவில் அவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். கிரிக்கெட் ஒரு சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டும் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதேபோல ரசிகர்கள் மத்தியிலும் பார்க்கப்படுவது கிடையாது. உணர்ச்சி ரீதியாக பல சம்பவங்கள் கிரிக்கெட் வரலாற்றில் நடந்திருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை நாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

- Advertisement -

1. வினோத் காம்ப்ளி

vinod kambli

1996 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி கிட்டதட்ட இலங்கை அணியை வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள். சச்சின் டெண்டுல்கர் ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராதவிதமாக ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி விட மற்ற அனைத்து வீரர்களும் அதற்கு அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட இந்தியாவிடம் இருந்து சென்ற நிலையில் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

கோபத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிவது நெருப்பு வைப்பது போன்ற அசம்பாவிதங்கள் செய்தார்கள். இதன் காரணமாக விளையாட்டு வீரர்களின் நலன் கருதி இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்திய அணியில் கடைசி வரை போராடி கொண்டிருந்த வினோத் காம்ப்ளி இந்திய அணி தோல்வி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் அனைத்து இந்திய ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.

- Advertisement -

2. ஸ்ரீசாந்த்

Sreesanth IPL

2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில்
மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. அந்த போட்டியில் எதிர்பாராவிதமாக மும்பை அணி தோல்வியை பெற, இறுதியில் பஞ்சாப் அணி வீரர்கள் அனைவரும் மும்பை அணி வீரர்களுக்கு கை கொடுத்தார்கள்.

அப்பொழுது ஸ்ரீசாந்த் மும்பை அணி வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு கைகொடுத்தார். ஏற்கனவே மும்பை தோல்வி பெற்ற நிலையில் சோகமாக இருந்த ஹர்பஜன் சிங், அப்பொழுது அவர் கூறிய சில வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஸ்ரீசாந்தை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார்.

ஸ்ரீசாந்த் ஹர்பஜன்சிங் தன்னை அடித்து அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மைதானத்தில் நெடுநேரம் கண்ணீர் விட்டார். இது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்து கொண்டிருந்த அனைத்து ரசிகர்களையும் வருத்தமடையச் செய்தது.

3. விராட் கோலி

Virat Kohli T20 WC

2012ம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்தியா மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்கிற நிலையில் இருந்தது.

ஆனால் இந்திய அணியால் அந்தப் போட்டியில் மிகபெரிய ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மட்டுமே தென்ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது. இதன் காரணமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

அப்பொழுது மைதானத்தில் இருந்த விராட் கோலி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டார். விராட் கோலி அவ்வாறு மனமுடைந்து கண்ணீர் விட்டது அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

4. ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மோர்னி மோர்க்கல்

ABD Crying

2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. ஆரம்பத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுவிடும் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அந்த போட்டியின் இறுதியில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை போராடி தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் சோகமாக காணப்பட்டனர். குறிப்பாக மோர்னே மோர்கல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது குறிப்பிடத்தக்கது.

5. மகேந்திர சிங் தோனி

Dhoni Crying

வெற்றி தோல்வி என எது வந்தாலும் எப்பொழுதும் கூலாக இருக்கும் மகேந்திர சிங் தோனி 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டார்.

போட்டி முடிந்தவுடன் வர்ணனையாளர் உடன் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், மகேந்திர சிங் தோனி மனமுடைந்து கண்ணீர் விட்டபடியே பேசினார். அவர் அவ்வாறு மனமுடைந்து கண்களில் கண்ணீருடன் பேசியதைக் கண்ட அனைத்து இந்திய ரசிகர்களின் கண்களும் ஈரமாகியது குறிப்பிடத்தக்கது