சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு முறை கூட நோபால் வீசாத 5 பந்துவீச்சாளர்கள்

0
830
Kapil Dev

முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிரீஸ்ஸை விட்டு ஒரு சில இன்ச் முன்வந்து பந்து வீசினால் அது நோபால் என்று கணக்கில் கொள்ளப்படும். அதன் மூலம் எதிரணிக்கு ஒரு ரன் கொடுக்கப்படும். ஆனால் ஐசிசி அந்த விதி முறையை மாற்றி அமைத்தது.

அந்த பந்தில் ஒரு ரன் கொடுக்கப்படுவது மட்டுமல்லாமல், மேலும் அதற்கு அடுத்து பந்து ஃப்ரீ ஹிட் வந்தாக மீண்டும் வீசப்படும் என்கிற விதிமுறையைக் கொண்டுவந்தது. இதன் மூலம் தற்போது உள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பந்து தவறுதலாக வீசிவிட்டால் அது இது எனக்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் ஆக அமைந்து விடும்.

- Advertisement -

எனவே ஒரு பந்துவீச்சாளர் முடிந்தவரை நோபால் கூட வீசி விடக்கூடாது என்கிற எண்ணத்தோடு தான் பந்து வீசுவார். ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஒரு சில வீரர்கள் ஒருமுறைகூட நோ பால் வீசியதால் கிடையாது. அப்படி ஒருமுறை கூட நோபால் வீசாத பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்

லேன்ஸ் கிப்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடிய ஜாம்பவான் வீரர் லேன்ஸ் கிப்ஸ் மொத்தமாக 29 டெஸ்ட் போட்டியிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக முதல் முறையாக 300 விக்கெட்டுகளை எட்டிய வீரரும் இவரே. நிறைய போட்டியில் விளையாடிய நிலையிலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட இவர் நோ பால் வீசியது கிடையாது.

இயின் போத்தம்

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் இவரும் ஒருவர். 16 வயது முதல் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர் மொத்தமாக இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

தலைசிறந்த வீரரான இவர் நிறைய போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட இவர் நோ பால் வீசியது கிடையாது.

இம்ரான் கான்

பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் நாட்டின் தலை சிறந்த வீரர்களாக கருதப்படும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். இவரது தலைமையில் 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ஒரு பந்து வீச்சாளராக மொத்தமாக 88 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 125 ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். நிறைய போட்டிகளில் விளையாடி அதில் நிறைய விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ஒரு முறை கூட இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நோபால் வீசியது இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

டென்னிஸ் லில்லி

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான இவர் இவர் விளையாடிய காலகட்டத்தில் தலை சிறந்த வீரராக திகழ்ந்தார். மேலும் இவர் விளையாடிய வேலையில் அவ்வளவாக சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத ஒரு வீரராக இருந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தமாக 70 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட இவர் நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கபில் தேவ்

இந்தியாவுக்காக விளையாடிய தலை சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் 1983-ம் ஆண்டு இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி இன்று முறையாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்தார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட சர்வதேச அளவில் 350 போட்டிகளுக்கு மேல் விளையாடி இருந்தாலும் ஒரு முறை கூட இவர் நோ பால் வீசியதால் கிடையாது என்று சொன்னால் தற்போது கூட யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு மிக சிறப்பாக ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக மிக சிறப்பாக பந்து வீசிய ஒரு தலைசிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.