ஐபிஎல் 2024.. அடிப்படை விலையை கூட்டியதால்.. யாரும் வாங்காமல் போக வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
24480

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏழாம் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்வதற்கான தேதியும் முடிவடைந்து இருக்கிறது. பல முக்கியமான வீரர்கள் அணிகளில் இருந்து கழற்றி விடப்பட்டிருப்பதால் நடைபெற இருக்கின்ற ஏலம் விறுவிறுப்பாக இருக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

க்ரிக்பஸ் இணையதளத்தின் தகவலின் படி இதுவரை 1166 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்து இருக்கிறார்கள். இவர்களிலிருந்து ஐபிஎல் போட்டி தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரரை ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும். வீரர்களின் பார்ம் மற்றும் அதிகப்படியான அடிப்படை விலை காரணமாக இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்ய வாய்ப்பில்லாத ஐந்து வீரர்களை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

கேதார் ஜதாவ்: இந்திய அணியின் வீரரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கடந்த சில சீசனங்களில் சரியாக விளையாடாததால் சென்னை அணி இவரை விடுவித்தது கடந்த வருட ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் இவரை வாங்கவில்லை. எனினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மாற்று வீரராக களம் இறங்கினார். இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை மேலும் உள்நாட்டுப் போட்டியிலும் சரியான ஃபார்மில் இல்லாததாலும் அடிப்படை விலையை இரண்டு கோடி என அதிகமாக வைத்ததாலும் இந்த வருட ஏலத்தில் இவர் தேர்வு செய்யப்படாமல் போகலாம்.

மெர்ச்சன்ட் டி லாங்: தென்னாப்பிரிக்கா அணியை சார்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆன இவர் கடந்த ஐபிஎல் சீசன் களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் இவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருட ஐபிஎல் ஏலத்திற்கு தனது அடிப்படை விலையை 1.5 கோடியாக நிர்ணயத்துள்ளார். சமீபத்தில் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற நாடுகளின் கிரிக்கெட்டிலி போட்டிகளிலும் இவர் பெரிதும் விளையாடாததால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கிறது.

கிரீஸ் லின்: ஆஸ்திரேலியா அணியைச் சார்ந்த அதிரடி ஆல்ரவுண்டரான இவர் கொல்கத்தா அணிக்காக சில ஆண்டுகள் விளையாடி வந்தார். அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கி அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக கொல்கத்தா அணி இவரை விடுவித்தது. இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். எனினும் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து மும்பை அணியால் விடுவிக்கப்பட்ட இவர் கடந்த இரண்டு ஐபிஎல் சீசன் களிலும் விளையாடவில்லை. பிபிஎல் தொடரிலும் தொடர்ந்து சராசரியான ஆட்டங்களையே வெளிப்படுத்தி இருப்பதால் இந்த வருட ஏலத்தில் அணிகள் இவரை வாங்குவதற்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம்.

- Advertisement -

பென் டக்கெட்: இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான இவர் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்து இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் பிபிஎல் போன்ற தொடர்களில் ஆடி இருந்தாலும் இந்திய ஆடுகளங்களில் இவருக்கு அனுபவம் இல்லை என்றே கூறலாம். இவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவரது அனுபவமின்மை காரணமாக அதிக விலை கொடுத்து இவரை எடுக்க ஐபிஎல் அணிகள் யோசிக்கும்.

ஜேமி ஓவர்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலிங் ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்காக தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்து இருக்கிறார். இவர் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் இதற்கு முன் ஐபிஎல் தொடர்களில் விளையாடியது இல்லை. மேலும் இந்திய ஆடுகளிலும் விளையாடிய அனுபவம் இல்லாதது இவருக்கு பின்னடைவாக அமையலாம். அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயித்திருப்பதால் இவரும் இந்த வருட ஏலத்தில் தேர்வு செய்யப்படாமல் போகலாம் .