தோனிக்கு முன்பே அறிமுகமாகி, ஓய்வு பெறாமல் இன்னும் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

0
525
Chris Gayle and Dinesh Karthik Debut

இந்திய அணியின் கேப்டன் வரிசையில் மகேந்திர சிங் தோனியின் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய அணிக்காக டி20 ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகை கோப்பையையும் பெற்றுத்தந்த கேப்டன் ஆவார்.

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடர்களில் கூட மிகப் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். முதல் இந்திய கேப்டனாக அவர்தான் ஐபிஎல் கோப்பையை 2010ஆம் ஆண்டு கைப்பற்றினார். மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு குறித்து அறிக்கையை கூறினார். தற்பொழுது ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தோனி விளையாட வருவதற்கு முன்னரே விளையாட வந்த ஒரு சில வீரர்கள் இன்னும் தங்களது ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் இருக்கின்றனர், அப்பேர்பட்ட வீரர்களைப் பற்றி பார்ப்போம்

தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் ராசியில்லாத ஒரு வீரர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான். மகேந்திர சிங் தோனி விளையாட வருவதற்கு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். மிகவும் பெரிய அளவில் அனைவராலும் பேசப்படும் தினேஷ் கார்த்திக் மகேந்திர சிங் தோனியின் நிழலில் காணாமல் போய்விட்டார் என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

தோனி போன்ற ஒரு வீரர் இருக்கும் வேளையில் தினேஷ் கார்த்திக்குக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் மிக சிறப்பாக விளையாடி தற்போதைய இந்திய ரசிகர்கள் மத்தியில் நற்பெயர் பெற்று உள்ளார். அவருடைய குறிக்கோளே இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே.

கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒரு மறக்கமுடியாத மற்றும் அவ்வளவு எளிதில் மறைந்து போகாத ஒரு வீரராக இன்றுவரை விளையாடி வருபவர் கிறிஸ் கெய்ல். 1999 ஆம் ஆண்டு முதல் விளையாட ஆரம்பித்த கிறிஸ் கெயில் இன்று வரை மிக அபாரமாக விளையாடி வருகிறார்.

எந்த ஒரு கிரிக்கெட் போட்டி என்றாலும் அதில் தனது அதிரடி காட்டி எதிரணியை அச்சுறுத்தும் கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஜாம்பவனாக தன்னுடைய பெயரை முத்திரை பதித்துள்ளார். தனது ஓய்வு குறித்த அறிக்கைக்கான கேள்வி எழுந்தபோது, நான் இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாடுவேன் என்று உறுதியாகக் கூறினார். அவர் கூறியது போல் இன்னும் ஐந்து ஆண்டுகள் அவரால் விளையாட முடியும் அதற்கு அவர் தகுதியானவர் தான் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுனர்களும் அவரை பறைசாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் மிஸ்ரா

2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒரு ஸ்பின் பவுலர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் அவர்தான் அமித் மிஷ்ரா. ஆரம்பித்தில் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்ட அமித் மிஷ்ரா நாளடைவில் போகப்போக தனது உடல் தகுதி காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் இன்றி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியை விட்டு வெளியேற ஆரம்பித்தார்.

இருப்பினும் தற்பொழுது ஐபிஎல் தொடர்களில் நன்றாக விளையாடி வருகிறார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மிஸ்ரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்ரா அனேகமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் இங்கிலாந்து அணிக்காக அபாரமாக விளையாடிய கூடிய ஒரு வீரர் என்றால் அது ஆண்டர்சன் தான். 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் இன்றுவரை இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

வயது ஆக ஆக என்னுடைய வேகம் கொஞ்சம் கூட குறையாமல் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரரும் ஆண்டர்சன் ஆவார். தற்பொழுது வரை 614 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தனது ஓய்வை அறிவிக்காத ஆண்டர்சன் தன்னுடைய ஓய்வை இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்பஜன் சிங்

1998ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த ஹர்பஜன்சிங்
அனில் கும்ப்ளே உடன் ஒப்பிடப்பட்டார்
இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வந்த ஹர்பஜன்சிங் நாட்கள் செல்லச் செல்ல இளம் வீரர்களின் வருகையால் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தூக்கப்பட்டார். அதன் பின்னர் ஐபிஎல் தொடர்களில் நன்றாக விளையாடி வந்த ஹர்பஜன்சிங் மும்பை அணிக்காக மிகப்பெரிய அளவில் விளையாடினார்.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகாலம் சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு முதல் முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ஹர்பஜன்சிங் அநேகமாக இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தனது ஆய்வறிக்கையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.