ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட 5 விதி முறைகள்

0
1162
Cricket Rules

முன்னொரு காலத்தில் ஆடிய கிரிக்கெட்டுக்கும் தற்போது உள்ள கிரிக்கெட்டுக்கும் பல மாற்றங்கள் உள்ளன. இன்றைய டெஸ்ட் போட்டிகளில் வெறும் 5 நாட்க்கள் மட்டுமே கணக்கில் அடங்குகின்றன. ஆனால் அக்காலத்தில், போட்டியின் முடிவு தெரியும் வரை டெஸ்ட் மேட்ச் நடக்கும். மெல்ல மெல்ல, 60 ஓவர் கொண்ட போட்டியில் ஆட ஆரம்பித்தனர். பின்னர், அது 50 ஓவராக குறைக்கப்பட்டு ஒருநாள் போட்டி என்றானது.

இந்நூற்றாண்டில், 20 ஓவர்கள் கொண்ட போட்டிகள் அறிமுகமாகின. அதே போல், விதிகளிலும் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. சென்ற நூற்றாண்டில் அமல்படுத்தப்படட் பல விதிகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. கிரிக்கெட்டில் நமக்கு தெரியாத 5 விதிகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள்

80களில் இங்கிலாந்து நாட்டில், ஒரு ஓவருக்கு நான்கு பந்துகள் வீதம் போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் அது 5/6 பந்துகள் ஆகின. அதன் பின்னர் மீண்டும் 8 பந்துகள் ஆக்கப்பட்டன. இங்கிலாந்தைப் பார்த்து மற்ற நாடுகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின.

சர்வதேச கிரிக்கெட்டில்லும் இதே விதி பின்பற்றப்பட்டன. கடைசியாக இது போன்ற போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ( 1978 & 1979 ) நடந்தன. அதற்குப் பிறகு, ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் என்ற விதி கொண்டு வரப்பட்டது. சமீபத்தில், ‘ தி 100 ‘ தொடரில் ஒரு ஓவருக்கு பத்து பந்துகள் வீசப்பட்டன.

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு தினம்

Test Cricket

ஒரு டெஸ்ட் போட்டி, ஐந்து நாட்கள் நடக்கும். அதாவது தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும். அதற்குள் போட்டியின் முடிவு தெரியவரவில்லை என்றால், அது ‘ டிரா ‘ ஆக கணக்கெடுக்கப்படும். அன்றைய காலக்கட்டத்தில், மூன்று நாட்களுக்கு பிறகு ஒரு நாள் ஓய்வு பெற்றுக்கொள்வர்.

- Advertisement -

ஓய்வு தினத்தோடு கடைசியாக ஆடிய டெஸ்ட் போட்டி, 2001ல் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்தது. அதன் பின், அவ்விதி நீக்கப்பட்டது. இது போன்ற விதி இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் உயர்ந்துள்ளது, பார்வையாளர்களும் அதிகரித்து உள்ளனர்.

3. பவுல் அவுட்

எதேனும் ஒரு போட்டி சமன் ஆனால், இவ்விதி செயல்பாட்டுக்கு வரும். 2007 டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் ‘ பவுல் அவுட் ‘ விதி பயன்படுத்தப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் இந்திய அணியே வெற்றி பெற்றது.

இந்த விதியில், ஒவ்வொரு அணியிலும் 5 பந்துவீச்சாளர்கள் ஸ்டெம்ப்பை நோக்கி பந்துவீசுவர். எவ்வணி அதிக முறை ஸ்டெம்ப்பில் அடிக்கிறதோ, அவ்வணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். நாளைடைவில் இவ்விதி நீக்கப்பட்டது. அதற்கு பதில் ‘ சூப்பர் ஓவர் ‘ விதி கொண்டுவரப்பட்டது. பவுல் அவுட் விதியைக் காட்டிலும் சூப்பர் ஓவர் விதியே சுவாரசியமாக கருதப்படுகிறது.

4. மாற்று வீரர்

டாஸ் போட்ட பிறகு, பிளேயிங் லெவனுடன் 12வதாக ஒரு வீரரை நியமிக்க வேண்டும். போட்டியின் நடுவில் எதேனும் ஒரு வீரரால் ஆட முடியவில்லை எனில் அவருக்கு பதில் இந்த 12வது வீரர் ஆடலாம். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவ்விதையை ஐசிசி அமல்படுத்தியது.

ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பின்னர் இவ்விதி செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. கடந்த பிக் பேஷ் லீக்கில் இதே போல் ‘ எக்ஸ் ஃபேக்டர் ‘ எனும் விதி கொண்டுவரப்பட்டது. 10வது ஓவருக்குப் பின் எதேனும் ஒரு வீரருக்கு பதில் இந்த 12வது வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம். ரசிகர்களும் இந்த விதியை வரவேர்த்தனர்.

5. 35 ஓவர்களுக்குப் பின் புதிய பந்தை பயன்படுத்துவது

தற்போது ஆடும் ஒருநாள் கிரிக்கெட்டில், இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவ்விதி முற்றிலும் வேறுபட்டது. இரண்டு எண்டிர்க்கும் சேர்த்து ஒரே ஒரு பந்து தான் உபயோகிக்கப்படும். அது 35 ஓவர்களுக்குப் பின்னர் மாற்றப்படும். அப்படி செய்வதால் ரிவர்ஸ் ஸ்விங் இல்லாமல் போகிறது. அதனால் அவ்விதியை ஐசிசி நிராகரித்தது.