தற்போது டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்கு இந்திய டி20 அணியில் சிறந்த காம்பினேஷன் எது என்கின்ற பரிசோதனையை இரண்டு வீரர்களின் வருகை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக எந்த காம்பினேஷன் சரியாக இருக்கும் என வெற்றியை விட பரிசோதனை முயற்சியை முக்கியமாக கருதி கம்பீர் சில வேலைகளை செய்து வருகிறார்.
வாஷிங்டன் சுந்தர் வருகை
இந்த நிலையில் இந்திய டி20 அணியில் குல்தீப் யாதவ் இடம்பெற்று இருக்கும்பொழுது இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உடன் ஹர்திக் பாண்டியாவும், இவர்களுடன் மிதவேக பந்துவீச்சு ஆள்றவுண்டராக சிவம் துபேவும் இருக்க வேண்டி வந்தது. இதனால் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது குல்தீப் யாதவ் இடத்தில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுகின்ற காரணத்தினால், இந்திய பேட்டிங் வரிசை 8 வரையில் பலமடைந்து விடுகிறது, மேலும் சிவம் துபேவை வெளியில் அனுப்பிவிட்டு, பும்ரா, அர்ஸ்தீப் மற்றும் ஹர்திக் பாண்டியா என வேகப்பந்து வீச்சு யூனிட்டை வலிமையாக அமைக்க முடிகிறது.
ஆர்சிபி வீரர் வருகை
மேலும் தற்போது டி20 அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடத்திற்கு ஜிதேஷ் சர்மா வந்திருப்பதால், அவர் கீழ் வரிசையில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், கீழ் வரிசையும் பலமடைகிறது, மேலும் முதல் நான்கு இடங்களில் விளையாடக்கூடியவர்களை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லாததால், ஒவ்வொருவருடைய இடமும், ரோலும் தெளிவாக மாறுகிறது.
இதையும் படிங்க : நான் அந்த ஷாட் நல்லா விளையாட.. அந்த தமிழக வீரர்தான் காரணம்.. அவருக்கு நன்றி – ஜிதேஷ் சர்மா பேச்சு
எனவே இந்த இரண்டு வீரர்கள் மீண்டும் இந்திய டி20 அணிக்குள் வந்ததால் உலகக் கோப்பைக்கு சரியான காம்பினேஷன் கிடைத்து விட்டதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே மீதமிருக்கும் போட்டியில் முடிந்த வரையில் இவர்களை விளையாட வைத்து, கடினமான சூழ்நிலைகளை கையாள விட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






