பும்ரா விளையாடாதது நல்லதுதான்.. இந்திய அணிக்கு தொடரை காப்பாற்ற வாய்ப்பு.. என்ன காரணம்?

0
126
Bumrah

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாததும் ஒரு வகையில் நல்லதாக அமைந்திருக்கிறது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தினால், நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

உடலை பிழியும் ஆடுகளம்

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தாலும் கூட பவுன்ஸ் இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆடுகளம் பவுன்ஸ் கூட இல்லாமல் முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.

மேலும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்த தொடரில் பும்ரா விளையாடுவார் என்ற நிலையில், அவரை பேட்டிங் செய்வதற்கு முழுக்க சாதகமான தட்டையான ஆடுகளத்தில் களம் இறக்குவது இன்னும் உடல் உழைப்பை அதிகப்படுத்தும். இதன் காரணமாக அடுத்து அவர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடுவதோடு, மேலும் காயம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

- Advertisement -

பும்ரா விளையாடாதது நல்லது

இந்த நிலையில் இந்திய அணி நேற்று ஐந்து விக்கெட் இழப்புக்கு முதல் நாளில் 310 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு, இந்த டெஸ்ட் போட்டியை வெல்லாவிட்டாலும் கூட டிரா செய்ய முடிந்தால், அது இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும். ஏனென்றால் பும்ரா விளையாடாத போட்டியில் தோற்காமல் இருந்தால் போதும். லார்ட்ஸ் மைதானத்தில் பந்து வீச்சுக்கு சாதகம் கிடைக்கும் பொழுது பும்ரா வந்தால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யவும் முடியும்.

இதையும் படிங்க : பாபர் அசாமுக்கு 9 வருடங்கள்.. சுப்மன் கில் அலட்சியமா செய்த பெரிய சம்பவம்.. விராட் அசாரை தாண்ட வாய்ப்பு

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கருண் நாயர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே இந்த மாற்றங்கள் எல்லாம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எவ்வளவு பலன் தருகிறது என்று தெரிந்து கொள்ள முடியும். இதை வைத்து அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான பிளேயிங் லெவனை உருவாக்க முடியும். எனவே இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்தால் கூட இந்திய அணிக்கு அது சாதகமானதாகவே அமையும்!

- Advertisement -