பாபர் அசாமுக்கு 9 வருடங்கள்.. சுப்மன் கில் அலட்சியமா செய்த பெரிய சம்பவம்.. விராட் அசாரை தாண்ட வாய்ப்பு

0
206
Gill

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கில் சதம் அடித்ததின் மூலம் பெரிய விஷயங்களை சாதாரணமாக செய்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அதிரடி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் 2 ரன், இது தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த கருண் நாயர் 31 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 17 பந்தில் 87 ரன்கள் எடுத்து இரண்டாவது சதத்தை தொடர்ந்து அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் 42 பந்தில் 25 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி ஆறு பந்தில் ஒரு 1 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கில் தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் முதல் நாள் முடிவில் 114 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். இவருடன் ஜடேஜா 41 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -

கில் செய்த பெரிய சம்பவங்கள்

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக அசாருதீன் மற்றும் விராட் கோலி இருவரும் தலா இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார்கள். ஆனால் இதை இந்திய கேப்டனாக கில் வெறும் இரண்டு போட்டிகளிலேயே செய்துவிட்டார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை இந்த தொடரிலேயே படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க : 31 பந்து 277 ஸ்ட்ரைக் ரேட்.. மீண்டும் சூரியவன்சி ருத்ர தாண்டவம்.. இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய U19 அணி வெற்றி

மேலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கூறப்படுகிற பாபர் அசாம் கடந்த 9 வருடத்தில் ஒரே ஒரு டெஸ்ட் சதத்தை மட்டுமே வெளிநாட்டில் அடித்திருக்கிறார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் கில் சாதாரணமாக இரண்டே வாரத்தில் இரண்டு சதங்களை இங்கிலாந்தில் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் அடுத்த சிறந்த நான்கு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாபர் அசாமை விட கில் மற்றும் ஜெய்ஸ்வால் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -