இந்திய கிரிக்கெட்

அன்றே எச்சரித்த புஜாரா.. இந்திய வீரர்களின் திறமையை வீணடிக்கும் கம்பீர்.. இத செஞ்சா சும்மா ஜெயிக்கலாம்

இந்தியாவில் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான டெஸ்ட் ஆடுகளங்களை உருவாக்கி கம்பீர் இந்திய பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கையை உடைப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மிக மோசமான ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் வெறும் 124 ரன்கள் நோக்கி விளையாடிய இந்தியா அணி 30 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த ஆடுகளத்தை தாங்களே கேட்டு வாங்கியதாக கம்பீர் ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்றே எச்சரித்த புஜாரா

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா தான் விளையாடிய குறிப்பிட்ட கடைசி காலகட்டத்தில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்தியாவில் தொடர்ந்து அமைக்கப்பட்டதால், தன்னுடைய தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டதாகவும், தன்னுடைய பேட்டிங் செயல் திறன் கீழே இறங்கி விட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இனி இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான ஆடுகளங்கள் அமைப்பதின் மூலமாக இளம் இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் கம்பீர் தலைமை பயிற்சியாளரான பிறகும் சுழல் பந்துவீச்சுக்கும் மோசமான சாதகத்தை கொடுக்கும் ஆடுகளையே அமைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திறமையை வீணடிக்கும் கம்பீர்

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களை ஓரளவுக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் விட்டால் பெரிய ரன்கள் அடிக்க முடியும். இதன் மூலம் எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி வெற்றியை நோக்கி நகரவும் முடியும். இதைத்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் செய்து காட்டினார்கள்.

இதையும் படிங்க: எனக்கு சாய் சுதர்சனை நினைச்சா கவலையா இருக்கு.. முதல்ல வாஷிங்டன் சுந்தர் அங்க தேவையா? – அஸ்வின் கேள்வி

மேலும் இந்திய ஸ்பின்னர்கள் சராசரியான ஆடுகளத்திலேயே விக்கெட் கைப்பற்றும் அளவுக்கு திறமை கொண்டவர்கள். இந்த நிலையில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பதால், எதிரணியின் சராசரியான ஸ்பின்னர்களும் ஆபத்தானவர்களாக மாறிவிடுகிறார்கள். கம்பீர் இதை புரிந்து கொள்ளாமல் மோசமான ஆடுகளத்தை விரும்புவதால், இந்திய வீரர்களின் திறமையை வீணடிக்கிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -
Published by