இந்திய கிரிக்கெட்

8 இன்னிங்ஸ் 4 சதம்.. துருவ் ஜுரல் கம்பீர் மேல் போட்ட பிரஷர்.. 2 இந்திய வீரர்களுக்கு தலைவலி – வெளியான தகவல்கள்

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இருந்து வரும் துருவ் ஜுரலை பேட்ஸ்மேனாக கணக்கில் எடுத்து அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் சுழல் பந்துவீச்சை மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய வீரராக துருவ் ஜுரல் இருக்கிறார். மேலும் கடைசிக் கட்ட வீரர்களுடன் இணைந்து அணிக்குத் தேவையான ரண்களை எடுத்து வருவதில் அவருக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது.

திருப்பம் தந்த தென் ஆப்பிரிக்க தொடர்

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்கு வந்திருக்கிறது. இந்திய ஏ அணிக்கு எதிராக தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் எடுக்க திணறிய போது துருவ் ஜுரல் அனாயசமாக முதல் இன்னிங்ஸில் 134 ரன், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன் என இரண்டு முறையும் ஆட்டம் இழக்காமல் எடுத்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

எட்டு இன்னிங்ஸ் நான்கு சதம்

மேலும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் துருவ் ஜுரல் கடைசியாக விளையாடிய எட்டு இன்னிங்ஸ்களில் மொத்தம் நான்கு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். 140, 1 & 56, 125, 44 & 6, and 132 and 127* ரன் என அவரது பேட்டிங் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : நான் ஒரு பாகிஸ்தான் பவுலரிடமிருந்து.. முக்கிய பவுலிங் கலையை கத்துக்கிட்டு இருக்கேன் .. சீக்கிரத்தில் தேறுவேன் – அர்ஸ்தீப் சிங் தகவல்

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இந்திய சூழலில் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரது இடங்கள் உறுதியில்லாமல் இருந்து வருகிறது. எனவே இந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்தை துருவ் ஜுரலுக்கு கம்பீர் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இந்த இரண்டு வீரர்களின் இடங்கள் தற்போது ஆபத்தில் இருக்கிறது. கம்பீர் என்ன முடிவு எடுக்கிறார்? என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -
Published by