நான் ஒரு பாகிஸ்தான் பவுலரிடமிருந்து.. முக்கிய பவுலிங் கலையை கத்துக்கிட்டு இருக்கேன் .. சீக்கிரத்தில் தேறுவேன் – அர்ஸ்தீப் சிங் தகவல்

0
94
Arshdeep

தற்போது இந்திய அணியின் நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் ஒரு முக்கியமான கலையை பாகிஸ்தான் பவுலர் ஒருவரிடம் இருந்து கற்று வருவதாக கூறியிருக்கிறார்.

கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்புக்கு வந்த பிறகு அர்ஸ்தீப் சிங் இந்திய அணிக்காக எல்லா டி20 போட்டிகளிலும் களம் இறக்கப்படுவதில்லை. மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் யுக்தியில் கம்பீர் செயல்படுவதால் மிகத் திறமையான பவுலரான இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

- Advertisement -

அர்ஸ்தீப் சிங் சாதனை

2024 ஆம் ஆண்டு இந்திய அணி t20 உலகக் கோப்பை தொடரை வென்று இருந்த பொழுது, அந்தத் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக அர்ஸ்தீப் சிங் இருந்தார். மேலும் இறுதிப் போட்டியில் கடைசிக் கட்ட ஓவரில் அவர் பந்து வீசிய விதம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

இத்துடன் சர்வதேச t20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றிய பவுலராக சாதனையும் படைத்திருக்கிறார். 64 போட்டிகளில் அவர் 100 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஒரு முனையில் பும்ரா இருக்கும் பொழுது இவர் விக்கெட் கைப்பற்றும் வேகம் மிக அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் வீரர் வீடியோவில் கற்கிறேன்

வேகப்பந்து வீச்சில் அவுட் ஸ்விங் வீசுவதில் கையின் மணிக்கட்டை பயன்படுத்தி பிளிக் செய்து வீசும் முறை இருக்கிறது. இந்த முறையை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவரின் டுடோரியல் வீடியோவை பார்த்து தான் கற்றுக் கொண்டு வருவதாகவும், சீக்கிரத்தில் அதை கற்றுக் கொண்டு விடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் பும்ராவை விட இவர் தான் முக்கிய பவுலர்.. நமக்கு பெரிய சொத்து – பத்ரிநாத் பேச்சு

இதுகுறித்து அர்ஸ்தீப் சிங் பேசும்பொழுது ” புதிய ஆடம்பரமான எந்த விஷயமும் இல்லை வழக்கமானதுதான். பந்தில் பளபளப்பான பக்கத்தை எப்படி கிரிப் செய்கிறோம் என்பதை பற்றியது இது. நான் பந்தின் பளபளப்பான பகுதியை முதல் ஸ்லிப் நோக்கி கொஞ்சம் சாய்த்து மணிக்கட்டை பயன்படுத்தி பிளிக் செய்ய முயற்சிக்கிறேன். 2023 24 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வாசிம் அக்ரம் மிட்சல் ஸ்டார்க உடனான உரையாடல் என்பது இதை செய்து காட்டினார். நான் அந்த வீடியோவை பார்த்து இதை கற்றுக் கொண்டு வருகிறேன். நான் இன்னும் இதில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் சீக்கிரத்தில் கற்றுக் கொண்டு விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -