நேற்று இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த ஒரு முக்கியமான தவறு, இந்திய அணிக்கு இரண்டு சதங்கள் கிடைக்கவும் பெரிய ஸ்கோர்க்கு செல்லவும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 101 ரன்கள், நேற்று முதல் நாளில் ஆட்டமெலக்காமல் களத்தில் நிற்கும் கேப்டன் கில் 127 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். இந்திய அணி முதல் நாளில் மூன்று விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து இருக்கிறது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் மற்றும் கஸ் அட்கின்சன் என மூன்று பேருமே காயத்தின் காரணமாக இடம்பெறவில்லை. இது அனுபவம் குறைவான இந்திய பேட்டிங் யூனிட்டுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது. எனவே கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் எடுத்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறினார்கள்.
நேற்று ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கவும், இங்கிலாந்து பவுலிங் யூனிட் மோசமாக இருக்கவும், இந்திய பேட்ஸ்மேன்களிடமிருந்து ரன்கள் கொட்ட ஆரம்பித்தது. இந்த நிலையில் இதை தடுப்பதற்கு இருந்த ஒரு நல்ல வாய்ப்பை பென் ஸ்டோக்ஸ் வீணடித்தார். இதுதான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
நேற்று இந்திய அணி முதல் செஷனில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள். எடுத்தது. மேலும் நேற்றைய பந்துவீச்சில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சு தவிர யாருடையதும் இந்திய பேட்ஸ்மேன்களை சிரமம் அடைய வைக்கவில்லை. நேற்றைய முடிவில் அவர்தான் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
இதையும் படிங்க : 93 வருடங்கள்.. இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை.. கில் அணி இங்கிலாந்து மண்ணில் சாதனை.. அசத்தல் சம்பவம்
இந்த நிலையில் இரண்டாவது செஷன் முழுவதுமாக பென் ஸ்டோக்ஸ் எந்த இடத்திலும் திரும்பி பந்து வீச்சுக்கு வரவில்லை. இரண்டாவது செஷன் மத்தியில் அல்லது இறுதியில் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி வராத காரணத்தினால் ஜெய்ஸ்வால் மற்றும் கில்லுக்கு மிகவும் வசதியாக அமைந்தது. இந்திய அணிக்கு இரண்டு சதங்களும் வந்தது. இரண்டாவது சிசன்னில் இந்திய அணி 25.2 ஓவரில் 123 ரன்கள் விக்கெட் இழப்பில்லாமல் குவித்தது. இந்த நிலையில் இறுதியாக சுதாரித்த பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது சீசனில் அதிகமாக பந்து வீசினார். ஆனால் நிலைமை கை மீறி சென்று விட்டது!