இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 93 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதில், சுப்மன் கில் தலைமையிலான அணி அதிரடி சாதனையை படைத்து அசத்தியிருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது.
சிறப்பாக ஆரம்பித்த நான்கு வீரர்கள்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 91 ரன்கள் வந்தது. கேஎல்.ராகுல் வழக்கம்போல சிறப்பாக நின்று விளையாடி 42 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து 159 பந்தில் 101 ரன்கள் எடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு கில் உடன் இணைந்து 163 பந்துகளில் 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நான்காவது டிக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் கில் இணைந்து சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடியில் கேப்டன் கில் சதம் அடித்து 175 பந்துகளில் 127 ரன்கள், ரிஷப் பண்ட் 102 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த ஜோடி 198 பந்தில் 138 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.
93 வருடங்களில் முதல் முறை
இந்திய அணி 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்த 93 வருடங்களில் 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழு விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்ததுதான், ஒரு நாளில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
இதையும் படிங்க: பேட்டிங்கில் கெத்து காட்டிய பண்ட்.. தோனியின் சாதனையை உடைத்து நம்பர் 1 இடத்திற்கு உயர்வு.. இந்தியா இங்கி முதல் டெஸ்ட்
இந்த நிலையில் நேற்று தலைமையிலான இந்திய அணி 85 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னாக இது பதிவாகி இருக்கிறது. மேலும் முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒரு நாளில் 350 ரன்கள் தாண்டி இந்திய அணி முதல் முறையாக எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






