சாய் சுதர்சனுக்கு ஸ்டோக்ஸ் விரித்த மாயவலை.. பரிதாபமாக மாட்டிய சம்பவம் – என்ன நடந்தது?

0
242
Sai

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் பென் ஸ்டோக்ஸ் சாய் சுதர்சனை திறமையாக செட் செய்து வீழ்த்தினார். இதுகுறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன் பென்ஸ் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிலும் பென் ஸ்டோக்ஸ் வசமே சிக்கி இருக்கிறார். அவர் 48 பந்துகளில் 3 ரங்கல் எடுத்து ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டம் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

சாய் சுதர்சனுக்கு விரித்த வலை

சாய் சுதர்சனுக்கு முதல் இன்னிங்ஸ் போலவே பெண் ஸ்டோக்ஸ் லெக் ஸ்லிப் ஒன்றை வைத்திருந்தார். தொடர்ந்து அவரது இடுப்புக்கு ஆரம்பத்தில் இருந்து பந்துகளை வீசி வந்தார். முதல் இன்னிங்ஸில் அந்த மாதிரி பந்தை விளையாடி ஆட்டம் இழந்த காரணத்தினால் சாய் சுதர்சன் தொடர்ந்து அந்த பந்துகளை விளையாடாமல் கீப்பருக்கு விட்டு வந்தார்.

இந்த நிலையில் இந்தத் திட்டத்திலிருந்து மாறிய பென் ஸ்டோக்ஸ் லெக் ஸ்லிப்பில் வைத்திருந்த பீல்டரை ஷார்ட் ஸ்கொயர் லெக்கில் வந்து நிற்குமாறு கூறினார். அந்த இடத்திற்கு பீல்டர் வந்த அடுத்த பந்து சாய் சுதர்ஷன் பந்தை ஆன்-டிரைவ் ஆடச்சென்று கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

என்ன மாதிரியான திட்டம்?

சாய் சுதர்சனுக்கு கால் காப்புக்குள் வரும் பந்தை விளையாடுவதில் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து பிரச்சனை இருந்தது. இதைப் புரிந்த பென் ஸ்டோக்ஸ் பந்தை உள்நோக்கி கால் காப்புக்கு ஸ்விங் செய்து வீசினார். மேலும் ஷார்ட் ஸ்கொயர் லெக் பீல்டரை கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக முன்னே நிற்க வைத்தார்.

இதையும் படிங்க : எந்த பவுலரிடமும் இல்லாத இந்த விஷயத்தை.. பும்ராவிடம் மட்டும் பார்க்கிறேன்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு

இந்த பந்தை சாய் சுதர்சன் கட்டாயம் விளையாட வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டார். இப்படியான பந்தை கட்டுப்படுத்தி விளையாடுவதில் அவருக்கு சிக்கல் இருக்கின்ற காரணத்தினால் பந்து காற்றில் பறந்தது. இதன் காரணமாக அவர் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்துவிட்டார். பீல்டர் அந்த இடத்திற்கு வந்ததை பார்த்தும் கூட சாய் சுதர்சனால் பந்தை தரையில் ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அழகாக செட் செய்த பென் ஸ்டோக்சை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -