எந்த பவுலரிடமும் இல்லாத இந்த விஷயத்தை.. பும்ராவிடம் மட்டும் பார்க்கிறேன்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் பாராட்டு

0
150

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் இவரது பந்துவீச்சு திறமையை இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டீபன் பின் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்று தனது முதல் இன்னிங்ஸ் முடிவில் 465 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி விளையாடும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 24.4 ஓவர்களில் 83 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணி எப்போது சிக்கலில் மாட்டுகிறதோ அப்போதெல்லாம் தோள் கொடுத்து காப்பாற்றி இருக்கும் இவரை ஒரு கணினியை போன்றவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் பின் பாராட்டியிருக்கிறார்.

முன்னாள் வீரர் பாராட்டு

இதுகுறித்து இவர் விரிவாக கூறும்போது ” அவர் ஒரு கணினியைப் போல எந்த சூழ்நிலையில் என்ன தேவை என்பதை அளவீடு செய்து சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அவர் விரும்புவதையும் கிட்டத்தட்ட துல்லியமாக செயல்படுத்த முடிகிறது. பேட்ஸ்மேன் பும்ராவின் காட்சிகளை எத்தனை மணி நேரம் வேண்டும் ஆனாலும் பார்க்கலாம். ஆனால் நீங்கள் அவரை எதிர்கொள்ளும் போது ஆச்சரியப்படுவீர்கள் அவர் என்ன மாதிரியான பந்தை வீசப் போகிறார் என யாருக்கும் தெரியாது.

இதையும் படிங்க:நீங்க எடுத்தது 5 விக்கெட் இல்ல மொத்தம் 9.. 2 மெகா சாதனை படைத்த பும்ராவுக்கு சச்சின் வித்தியாச வாழ்த்து

அது வீசும் போது அவரது கை, பாதை மாற்றப்பட்டு இருக்காது மற்றும் விரல் நிலை மாற்றப்பட்டு இருக்காது. ஒரு பேட்ஸ்மேன் தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்வினை மாற்றுவதை மட்டுமே நம்பியிருக்க முடியும்” என அவர் பேசி இருக்கிறார். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு இனிய ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க போராடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

- Advertisement -