நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்பெஷலான ஒரு வியூகத்துடன் களம் இறங்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இருவரும் விளையாடவில்லை. பந்துவீச்சில் நூர் அகமத் மற்றும் பேட்டிங்கில் ருதுராஜ் சிறப்பாக விளையாடி இருக்க அந்த போட்டியில் சிஎஸ்கே வென்றது.
ஹைதராபாத்துக்கு போட்ட ஸ்கெட்ச்
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று இருந்தது. ஏழாவது போட்டியில் தங்களது சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடியது. மேலும் சொந்த மைதானத்தில் அதிரடியான ஹைதராபாத் அணியை அடக்கி வெல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதன் காரணமாக பேட்டுக்கு நன்றாக பந்து வரும் வான்கடே மைதானத்தின் சிவப்பு மண் ஆடுகளத்தை கொஞ்சம் தண்ணீர் விட்டு மெதுவாக மாற்றி ஹைதராபாத் போட்டிக்கு கொடுத்தார்கள். இதன் காரணமாக அதிரடியான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் ஹைதராபாத் பந்து கொஞ்சம் மெதுவாக வந்ததால் பெரிய அளவில் சிரமப்பட்டு இறுதியாக 162 ரன் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை 18.1 போரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கேவுக்கு என்ன ஸ்கெட்ச்?
மேலும் தனது எட்டாவது போட்டியில் இன்று மீண்டும் மும்பை தங்களது சொந்த மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் எட்டு போட்டியில் நான்கு போட்டியில் வெற்றி மற்றும் நான்கு போட்டியில் தோல்வி என மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும். இதற்கு சிஎஸ்கே அணிக்கு என்ன மாதிரியான ஆடுகளத்தை கொடுக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : தோனி இந்த 2 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க.. மும்பைய கட்டாயம் நம்மால் ஜெயிக்க முடியும் – சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை
எனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு ஐதராபாத்துக்கு கொடுத்தது போல மெதுவான ஆடுகளத்தை கொடுக்க மாட்டார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் மெதுவான ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்கள். மேலும் மெதுவான ஆடுகளத்தில் தேவையான ரன்னை சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டால் எடுக்க முடியும். ஆனால் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 200 ரன்கள் தாண்டி பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது. எனவே பேட்டுக்கு பந்து நன்றாக வரும் வகையில் வழக்கமான வான்கடே ஆடுகளமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது!






