ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒப்பந்த பட்டியல்: ஸ்டோனிஸ் நீக்கம்.. 4 புதியவர்கள் உட்பட 23 வீரர்கள் லிஸ்ட் அறிவிப்பு

0
339

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 23 கிரிக்கெட் வீரர்கள் அடங்கி இருக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நீக்கி ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சில வாரங்களுக்கு முன்பு வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. அதில் முன்னணி வீரர்கள் அவர்களின் திறமைகள் மற்றும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஊதியப் பட்டியலைப் பெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகியோரின் பெயர்களை நீக்கி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி லீகில் விளையாட ஆர்வம் காட்டாமல் பிசிசிஐயை எதிர்த்து ஐபிஎல் தொடருக்கு தயாராகியதால் பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதேபோல தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் 23 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் பெயர்களை நீக்கி அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

தற்போது மார்க்கஸ் ஸ்டானிஸ் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் விளையாடி வருகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதேபோல டி20 தொடரில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விளையாடினர். இருப்பினும் ஸ்டாய்னிஸ்க்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஊதியப்பட்டியலில் இடம் கொடுக்கவில்லை.

இவர்களை தவிர நாதன் எல்லிஸ், மார்ட் சாட், ஆரோன் ஹார்டி மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகிய நான்கு வீரர்களின் பெயர்களை புதிதாக இணைத்துள்ளது. டேவிட் வார்னருக்கு தற்போது 37 வயதாகி வருவதால் அவர் ஏற்கனவே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனவே இந்த ஆண்டு உலக கோப்பையுடன் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதால் அவரது பெயர் நீக்கம் எதிர்பார்த்ததுதான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வரும் டி20 உலக கோப்பையில் முக்கிய நபராக காணப்பட்டாலும் அவருக்கு பதிலாக ஆரோன்ஹார்டி ஒயிட் பால் கிரிக்கெட்டில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு சிறந்த மாற்று வீரராக காணப்படுகிறார். எனவே அவர் ஒப்பந்தத்திற்கு தகுதியானவர் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தேசிய தேர்வு தலைவர் ஜார்ஜ் பெய்லி.

இதையும் படிங்க: 2017 ஐபிஎல்.. கேப்டனா எனக்கு தோனி நிறைய உதவி செய்தார்.. மறக்கவே முடியாது – ஸ்மித் பேச்சு

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 23 வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியல்: சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லையன், நாதன் லையன், மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, ஜே ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா