இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியான நிலையில் சிக்கி இருக்கிறது. இப்படியான சூழலில் பிளேயிங் லெவனில் என்ன மாற்றத்தை கொண்டு வரலாம்? என்பது குறித்து கிரிக்கெட் அனலைஸ்ட் பிரசன்னா கூறியிருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி டை செய்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளிலும் நல்ல துவக்கம் கிடைக்கும் இந்திய அணியின் மிடில் ஆர்டர்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான துவக்கம் தந்து வெளியேற, தொடர்ந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிவம் துபே என மிடில் ஆர்டர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்புகின்ற காரணத்தினால் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் எதிர்பாராத முடிவை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு சிவம் துபே இடத்தில் ரியான் பராக், மேலும் கே.எல்.ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இடத்திற்கு ரிஷப் பண்ணிட்டு வரப்பட வேண்டும் என வெளியில் இருந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
இது குறித்து தற்பொழுது ஆர்சிபி முன்னாள் அனலைஸ்ட் பிரசன்னா கூறும்பொழுது “கொழும்பு ஆடுகளத்திற்கு இரண்டு பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. எனவே அர்ஸ்தீப் சிங் அல்லது முகமது சிராஜை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ரியான் பராக்கை விளையாட வைத்தாலே போதும். சிவம் துபேவை தேவைப்பட்டால் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஒன்று இரண்டு ஓவர்கள் வீசவைத்து கொள்ளலாம். மேலும் அவரால் கொஞ்சம் பேட்டிங் செய்ய முடியும் இதனால் பேட்டிங் வரிசை நீளமாக அமையும்.
இதையும் படிங்க : ரியான் பராக் அபிஷேக் ஷர்மா.. 2 பேருக்கும் பிசிசிஐ இந்த பிளான்தான் பண்ணும் – இந்திய முன்னாள் பீல்டிங் கோச் ஸ்ரீதர் பேட்டி
மேலும் உங்களுக்கு ரிஷப் பண்ட் கட்டாயம் தேவை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் அவரை நீங்கள் விளையாட வைப்பதற்கு முயற்சி செய்யலாம். மற்றபடி இரண்டு வேகப்பந்து வீச்சாளரில் ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு ரியான் பராக்கை கொண்டு வந்தால் கூடுதல் பேட்ஸ்மேன் மற்றும் கூடுதல் பவுலர் என இரண்டையும் அவரே செய்வார்” என்று கூறி இருக்கிறார்.