தற்போது கிரிக்கெட் வடிவங்களில் டி20 கிரிக்கெட் மிகவும் அதிகம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய டி20 கிரிக்கெட் எதிர்காலம் வருங்காலத்தில் மிகச் சிறப்பாக அமைவதற்கான சிறந்த வீரர்கள் தென்படுகிறார்கள். இதில் மிக முக்கியமாக இருக்கப் போகும் ரியான் பராக் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருடைய கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும் என இந்திய முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.
ரவி சாஸ்திரி பயிற்சி காலத்தில் அவருடைய பயிற்சி குழுவில் பீல்டிங் பயிற்சியாளராக ஆந்திராவை சேர்ந்த ஆர்.ஸ்ரீதர் இருந்து வந்தார். பிறகு ராகுல் டிராவிட் வர அந்த இடத்துக்கு டி.திலீப் கொண்டுவரப்பட்டார். பிறகு ஸ்ரீதர் தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டுக்கு எனவே உருவாக்கப்பட்ட வீரர் போல தெரியும் அபிஷேக் சர்மா தற்பொழுது இந்திய டி20 அணியில் இருந்து ஒரு வாய்ப்புக்கு பிறகு வெளியில் வைக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தன்னுடைய இரண்டாவது போட்டியில் அதிரடியாக சதமும் அடித்து இருந்தார்.
மேலும் ரியான் பராக் இந்திய டி20 அணியில் இடம் பெறுவதோடு தற்பொழுது இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் அணிகளும் இடம் பெற்று இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரராக பார்க்கப்படும் இவர்களை பிசிசிஐ எப்படி உருவாக்கிக் கொண்டு வரும்? என்பது குறித்து ஆர்.ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆர்.ஸ்ரீதர் கூறும் பொழுது “நிச்சயமாக இந்த இரண்டு வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்படும். பிசிசிஐ செலெக்டர்கள் இவர்களை தேர்ந்தெடுத்து அதிக வாய்ப்புகளை கொடுப்பார்கள்.எதிர்காலத்தில் இந்த இருவருமே நிறைய டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார்கள். அடுத்து சாம்பியன்ஸ் டிராபி ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் இருக்கிறது. ஏழு மாதங்கள் இதற்கு இருக்கும் நிலையில் மூன்று போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருக்கிறது. எனவே இந்த வடிவத்தில் அதிக வாய்ப்புகளை பெற முடியாது.
இதையும் படிங்க : நாளைக்கு நான் டீம்ல இல்லனா என்ன பண்ணுவ?.. கோலி ரோகித்த தோனிதான் காப்பாற்றினார் – சர்துல் தாக்கூர் பேட்டி
ஆனால் நிச்சயமாக அபிஷேக் ஷர்மா மற்றும் ரியான் பராக் இருவரும் இந்திய ஏ அணி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் என நிறைய போட்டிகளில் தொடர்ந்து விளையாட வைக்கப்படுவார்கள். இதில் அவர்கள் இன்னும் முழுமை அடைந்து சிறப்பான வீரர்களாக உருவாவார்கள். இதைத்தொடர்ந்து இந்திய செலெக்டர்கள் இவர்களை இந்திய கிரிக்கெட்டுக்குள் தகுந்த நேரத்தில் கொண்டு வருவார்கள்” என்று கூறியிருக்கிறார்.