கோரி ஆண்டர்சன் வெளியிட்ட வெறித்தனமான ஆல் டைம் டி20 XI.. கேப்டன் தோனி .. இந்தியாவின் முக்கிய வீரருக்கு இடம் இல்லை!

0
2442
Dhoni

நியூசிலாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 2012 ஆம் ஆண்டு அறிமுகமான இடதுகை பேட்ஸ்மேன் கோரி ஆண்டர்சன், மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் எதிர்கால வீரராக அந்த அணிக்கு கருதப்பட்டார். இடையில் சில நல்ல ஆட்டங்களை அதிரடியாக விளையாடிய அவர், பின் நாட்களில் சரியாக செயல்பட முடியாமல் போக, நியூசிலாந்து அணியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை!

2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, 21 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் கோரி ஆண்டர்சன் 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் சாகித் அப்ரிடி 37 பந்துகளில் அதிவேக சதம் அடித்திருந்ததை முறியடித்து, 36 பந்துகளில் சதம் அடித்து புதிய உலகச் சாதனை படைத்தார்.

- Advertisement -

பின்பு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்ற சீசனில், கடைசி லீக் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்றார். அவரது அந்த ஆட்டத்தின் காரணமாக பிளே ஆப் சுற்றுக்குள் தட்டு தடுமாறி நுழைந்த மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது.

தற்பொழுது கோரி ஆண்டர்சன் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடுகிறார். அங்கிருந்து நமது ஸ்வாக் கிரிக்கெட் ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆல்டைம் பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஒரு சுவாரசியமாக அதிரடி வீரரான அவர் தன்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோரி ஆண்டர்சனின் சர்வதேச ஆல்டைம் டி20 பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடது கை பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் மற்றும் ஆஸ்திரேலியாவில் ஷேன் வாட்சன் இருக்கிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் நண்பர்களான இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபி.டிவில்லியர்ஸ் வருகிறார்கள்.

- Advertisement -

இவருடைய இந்த பிளேயிங் லெவனில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனியை கோரி ஆண்டர்சன் வைத்திருக்கிறார். மேலும் ஸ்பின் டிபார்ட்மெண்டுக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் இருவரும் இருக்கிறார்கள். ஃபாஸ்ட் பௌலிங் டிபார்ட்மெண்டுக்கு இலங்கையின் லசீத் மலிங்கா மற்றும் தனது சக நாட்டவரான ஷேன் பாண்ட் இருவரையும் வைத்திருக்கிறார்.

கோரி ஆண்டர்சனின் சர்வதேச ஆல் டைம் டி20 பிளேயிங் 11 :

கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், ஜோஸ் பட்லர், ஆண்ட்ரே ரசல், எம்எஸ் தோனி, ரஷித் கான், சுனில் நரேன், லசித் மலிங்கா மற்றும் ஷேன் பாண்ட்.