பாகிஸ்தானில் பாபர் ஆசமை விமர்சித்த பிறகு ஹோட்டலை விட்டு வெளியே வர முடியவில்லை! ஆனால் விராட் கோலிக்கு… சைமன் டவுல் பரபரப்பு பேச்சு!

0
1684
Simon Doull

இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடரின் பதினாறாவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது!

சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் பெங்களூர் மைதானத்தில் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கடைசிப் பந்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் பந்துவீச்சிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர் விராட் கோலி பவர் பிளேவில் 25 பந்துகளைச் சந்தித்து 42 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து அவர் அரை சதம் அடிக்க 8 ரன்களுக்கு 10 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து அப்பொழுது வர்ணனையில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல்
“இது தனிப்பட்ட வீரர்களின் மைல்கற்களுக்கான கிரிக்கெட் வடிவம் கிடையாது. இத்தனை பந்துகளை எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது!” என்று கொஞ்சம் கடுமையாக விமர்சித்தார். இவரது பேச்சு இந்தியாவில் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை சமூக வலைதளத்தில் எதுவும் ஏற்படுத்திவிடவில்லை.

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 தொடரில் பெசாவர் சல்மி அணிக்காக விளையாடிய பாபர் ஆசம் குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 65 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார். இந்த ஆடுகளமும் பேட்டிங் செய்ய மிக மிக சாதகமானது. சதத்திற்கு முன்பு 83 ரன்களில் இருந்து நூறு ரன்களை எட்ட 14 பந்துகளை பாபர் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

பாபரின் சதத்திற்கான இந்த மெதுவான ஆட்டத்தை பற்றி அப்பொழுது வர்ணனையில் இருந்த சைமன் டவுல்
” அணியை முதலில் வைப்பதை விட சில நாட்களாக இப்படித்தான் நடக்கிறது. நிறைய விக்கட்டுகள் வெளியே இருக்கிறது இப்பொழுது பவுண்டரிக்குதான் அதிரடியாக விளையாட வேண்டும். சதங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் எல்லாமே சிறந்தவை என்றாலும் அது அணியை விட முக்கியம் கிடையாது!” என்று விமர்சனம் செய்திருந்தார்.

தற்பொழுது பாபர் மீதான இந்த விமர்சனத்திற்கு தான் எப்படியான சோதனைகளை பாகிஸ்தானில் சந்தித்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் பொழுது ” பாகிஸ்தானில் அப்போது இருந்தது சிறையில் இருந்தது போல இருந்தது. பாபரின் ரசிகர்கள் எனக்காக ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்ததால், எனக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. சரியான உணவு கூட இல்லாமல் நான் பல நாட்கள் இருந்தேன். கடுமையாக மனரீதியாக துன்புறுத்தப்பட்டாலும் கடவுளின் அருளால் நான் அங்கிருந்து தப்பினேன்!” என்று கூறியிருக்கிறார்!