“உண்மையை ஜீரணிக்கவே முடியல!” – ஹர்திக் பாண்டியா உலக கோப்பையில் விளையாட முடியாமல் உருக்கமான ட்வீட்!

0
706
Hardik

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டில் எந்தக் குறையும் இல்லை.

ஒட்டுமொத்தமாக மூன்று துறைகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இந்திய அணி வேகப்பந்து வீச்சில் காட்டும் அசாதாரணமானதாக இருக்கிறது.

- Advertisement -

முகமது சமி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுத் துறையில் வந்து இணைந்த பிறகு இந்திய பவுலிங் யூனிட் மிக ஆக்ரோஷமான ஒன்றாக மாறியிருக்கிறது. பேட்மேன்கள் முதல் பதினைந்து ஓவர்களில் என்ன செய்வது என்று தெரியாமல் வெளிப்படையாகவே தடுமாறுகிறார்கள்.

இப்படி எல்லா அம்சங்களும் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினாலும், இதுவரை தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி வந்திருப்பதாலும், இந்த முறையும் உள்நாட்டில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஆனால் இப்படியான நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி அதிர்ச்சி அளித்திருக்கிறார். அவருடைய காயம் இன்னும் குணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பது ஆறாவது பந்துவீச்சாளராக அணிக்கு மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும். மேலும் இவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பது அணிக்கு கூடுதல் சாதகமாக அமைந்திருந்தது. ஒட்டுமொத்தமாக தற்போது உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாதான். சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு.

தற்பொழுது இது குறித்து சோகமாக ட்வீட் செய்துள்ள ஹர்திக் பாண்டியா அதில் “உலகக் கோப்பையில் எஞ்சிய ஆட்டங்களை நான் இழக்கக்கூடும் என்கின்ற உண்மையை ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பந்திலும் நான் இந்திய அணி உடன் ஆதரவாக இருப்பேன்.

அனைத்து வாழ்த்துகளும், அன்பும் மற்றும் பெரிய ஆதரவும் நம்ப முடியாத வகையில் இருந்தது. இந்த அணி மிகச் சிறப்பாக இருக்கிறது. அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எப்பொழுதும் அன்புடன் உங்கள் ஹர்திக் பாண்டியா!” என்று குறிப்பிட்டு இருக்கிறார்!