கான்வெ-ருத்துராஜ் ஓபனிங்கில் வெறித்தனம்; துபே சிக்ஸர் மழை… 223 ரன்கள் குவித்த சிஎஸ்கே!

0
583

ஓப்பனிங்கில் கான்வே மற்றும் ருத்துராஜ் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, ஜடேஜா மற்றும் துபே அதிரடி கேமியோ ஆடியதால் சிஎஸ்கே அணி 223 ரன்கள் குவித்தது.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் கடைசி லீக் களமிறங்கிய சிஎஸ்கே அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. டெவான் கான்வெ மற்றும் ருத்துராஜ் இருவரும் ஓபனிங் செய்தனர்.

- Advertisement -

இந்த ஜோடி பவர்-பிளே ஓவர்களில் ஆங்காங்கே சில பவுண்டரிகளை அடித்து நிதானம் காட்டி வந்தனர். 6 ஓவர்களில் 52 ரன்கள் அடித்தனர். அதன் பிறகு ஆட்டத்தை அடுத்த கியருக்கு மாற்றிய ருத்துராஜ் சிக்ஸர் மழைகளாக பொழிந்தார்.

அக்சர் பட்டேல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள், குல்தீப் யாதவ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை ருத்துராஜ் அடிக்க, ஓபனிங் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை விரைவாக கடந்தது.

ருத்துராஜ் அரைசதம் கடந்து இன்னும் அதிரடியாக விளையாடினார். துரதிஷ்டவசமாக 50 பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 79 ரன்களுக்கு அவுட் ஆனார். ருத்துராஜ்-கான்வெ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதுவரை நிதானமாக விளையாடி வந்த டேவான் கான்வே, ருத்துராஜ் ஆட்டம் இழந்த பிறகு தனது அதிரடியை ஆரம்பித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 நெருங்கியது. கான்வெ தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி வந்தார். இவர் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

உள்ளே வந்தவுடன் சிக்சர் அடித்து ஆரம்பித்த தூபே 9 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் உட்பட 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு உள்ளே வந்த தோனி ஐந்து ரன்கள் மற்றும் ஜடேஜா 7 பந்துகளில் 20 ரன்கள் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தூபே மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான கேமியோ கொடுத்ததால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்தது சிஎஸ்கே அணி.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் சிஎஸ்கே அணி 223 ரன்கள் அடித்திருப்பது, கிட்டத்தட்ட ஒரு காலை பிளே-ஆப் சுற்றுக்குள் வைத்து விட்டது போல இருக்கிறது. இவ்வளவு பெரிய இலக்கை டெல்லி அணி கடக்குமா? சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் கனவை தகர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.