ஆர்சிபிக்கு எதிராக அம்பயரின் 4 தவறான முடிவு.. விராட் கோலியும் ரசிகர்களும் கோபம்.. களத்தில் என்ன நடந்தது?

0
2177
RCB

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக நடுவரின் நான்கு தவறான முடிவுகள் ஆர்சிபி ரசிகர்களை பெரிய கோபம் அடைய வைத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 61, ரஜத் பட்டிதார் 50, தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆர்சிபி அணி பேட்டிங் செய்யும்பொழுது நடுவர்கள் கொடுத்த முடிவுகள் பெரிய சர்ச்சையை தற்பொழுது சமூக வலைதளத்தில் உருவாக்கி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை நடுவர்களின் அணி என பலரும் சமூக வலைதளத்தில் மிகவும் கோபமாக விமர்சித்து வருகிறார்கள்.

முதலில் ஆகாஷ் மதுவால் தடுத்த ஒரு பந்து பௌண்டரி எல்லையில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் நடுவர் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த பந்து வீசப்பட்ட பின்பு ரிப்ளைவில் பார்த்த பொழுது பவுண்டரி என தெரிந்தது. இங்கிருந்து ஆரம்பித்தது நடுவர்களின் தவறுகள்.

இதற்கு அடுத்து பாப் டு பிளிசிஸ் பேட்டிங் செய்யும்பொழுது பும்ரா பந்துவீச்சில் இஷான் கிஷான் கேட்ச் பிடித்து அவுட் கேட்டார். அப்பொழுது அவர்களிடம் ரிவ்யூ இல்லை. இதற்கு ஏற்றார்போல நடுவர் இஷான் கிஷான் சரியாக பந்தை பிடித்தாரா? இல்லையா? என்கின்ற ரிவ்யூவுக்கு சென்றார். இதில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா? என்றும் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவும் ரசிகர்களை கோபமடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன டி20 உலக கோப்பைக்கு பிளானா? – ரோகித் டிகே இடையே களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

அடுத்து தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்யும்பொழுது இடுப்பு உயரத்திற்கு மேல் பந்து இருந்ததாக புகைப்படத்தில் தெரிந்தது. ஆனால் மூன்றாவது நடுவர் ஒரு சென்டிமீட்டர் அளவில் அது நோபல் இல்லை என அறிவித்தார். இதற்கு அடுத்து மகிபால் லோம்ரர் பும்ரா பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார். ஆனால் பந்து பும்ரா வீசிய கோணத்தில் ஸ்டெம்பை விட்டு வெளியே செல்வது போல்தான் தெரிந்தது. இந்த நான்கு முடிவுகளும் ஆர்சிபி அணிக்கு வெளிப்படையாக எதிராக அமைந்த காரணத்தினால், விராட் கோலியும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆர் சி பி ரசிகர்களும் கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.