பழைய கதையைதான் தொடருது; ஆர்.சி.பி நம்பர் ஒன் கிடையாது- ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடி கருத்து!

0
563
RCB

கிரிக்கெட் உலகில் பலவீரர்கள் இருந்தாலும் சில வீரர்கள் மட்டுமே ஒரு புதிய துவக்கத்திற்கு அடித்தளம் இட்டவர்களாக அடையாள வீரர்களாக காணப்படுவார்கள்!

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே பந்தை காற்றில் அடிப்பது பெரிய பாவம் என்று கருதப்பட்ட காலத்தில், காற்றில் மட்டும்தான் அடிப்பேன் என்று வந்து 70 80களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியவர் வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ்!

- Advertisement -

பிறகு 50 ஓவர் போட்டிகள் வந்து மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த 90களில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியை எப்படி ஆட வேண்டும் என்று காட்டிய சச்சின் அந்த விளையாட்டிற்கான அடையாள வீரர்.

இதற்கு அடுத்து கிரிக்கெட் விளையாட்டு நவீனமடைந்து கிரிக்கெட் ஷாட்களில் புதிய ஷாட்கள் பேட்ஸ்மேன்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேல் இங்கிலாந்தைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன் அதிநவீன கிரிக்கெட் காலத்திற்கான துவக்க அடையாள வீரராக அறியப்படுகிறார்!

இந்த வகையில் அதிநவீன கிரிக்கெட் காலத்தில் அதிநவீன கிரிக்கெட் ஷாட்களை மிக வெற்றிகரமாக விளையாடி கிரிக்கெட்டுக்குள் இருந்த இன்னொரு தீவிர சுவாரசியத்தை வெளியில் காட்டியவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏ.பி.டிவில்லியர்ஸ்!

- Advertisement -

இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம். காரணம் இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூர் அணிக்காக பல அதிசயக்கத்தக்க ஆட்டங்களை விளையாடி பலரது இதயங்களில் இடம்பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிய, தான் விளையாடிய பெங்களூர் அணி குறித்தும் மனம் திறந்து அவர் மிக நேர்மையாக சில தகவல்களை கூறியிருக்கிறார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது
” பெங்களூர் அணியை பார்க்கும் பொழுது கடந்த சீசன் அவர்களுக்கு நல்ல ஒன்றாகவே இருந்தது. அவர்கள் தொடரில் நீண்ட தூரம் சென்றார்கள். சமநிலை கொண்ட அணியாகவும், சரியான மாற்று வீரர்களைக் கொண்ட அணியாகவும், சில வீரர்கள் நல்ல ஃபாமிலும் இருந்தார்கள். ஆனாலும் அணியில் ஒரு குறை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது என்னவென்றால் டாப் ஆர்டரில் மிக அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள் தேவை. முன்பும் இதேதான் பிரச்சினையாக இருந்தது தற்பொழுதும் இதே தான் பிரச்சனையாக இருக்கிறது ” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” துவக்க வரிசையில் நல்ல கிளாஸ் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சிலும் அப்படியேதான். கேசில்வுட் நல்ல தரமான வேகப்பந்துவீச்சாளர். நல்ல அனுபவம் வாய்ந்தவர். எங்களுக்கு சில வருடங்களாக இதே தான் தேவைப்பட்டது. மேக்ஸ்வெல் மற்றும் ரஜத் பட்டி தார் நல்ல பார்மில் இருந்தார்கள். தற்பொழுது இவர்களைச் சுற்றி இரண்டொரு வீரர்கள் நல்ல பார்மில் இருக்க வேண்டும். விராட் கோலி இந்த உலக கோப்பையில் நன்றாக விளையாடி இருந்தார். அவர் ஃபார்மில் தொடர்ந்தால் நாங்கள் வெகு தூரம் செல்வோம். மேலும் மற்றவர்களின் செயல் திறனை காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். மேலும் வீரர்கள் கடந்த ஆண்டிலிருந்து நல்ல தன்னம்பிக்கையை பெற்றிருக்கிறார்கள். இதிலிருந்து அணியை கட்டி எழுப்பி அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும். உண்மையை சொல்வதென்றால் பெங்களூர் அணி நம்பர் ஒன் அணி கிடையாது . ஆனால் நல்ல ஒரு அணி!” என்று கூறியிருக்கிறார்!