24 பந்தில் 42; 34 பந்தில் 50…சொந்த ரெக்கார்டுக்கு ஆடுனா, டீம் இப்படி தான் தோல்வியில் முடியும் – விராட் கோலியை சரமாரியாக சாடிய முன்னாள் வீரர்!

0
265

விராட் கோலி 42 ரன்களில் இருந்து 50 ரன்கள் கடப்பதற்கு கிட்டத்தட்ட 10 பந்துகளை எடுத்துக் கொண்டார். இப்படி சொந்த ரெக்கார்டுக்காக விளையாடினால் அணியின் தோல்விதான் மிஞ்சும் என்று சாடியுள்ளார் முன்னாள் வீரர் சைமன் டவுல்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் இருவரும் ஓபனிங் செய்து முதல் ஓவரில் இருந்தே அடிக்க துவங்கினர்.

- Advertisement -

விராட் கோலி அதிரடியை ஆரம்பித்ததால் மறுமுனையில் டூ பிளசிஸ் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தார். 24 பந்துகளில் 42 ரன்கள் எட்டிய விராட் கோலி 50 ரன்கள் எட்டுவதற்கு அடுத்த பத்து பந்துகளை எடுத்துக் கொண்டார்.

34 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்து, 44 பந்துகளில் 61 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அதாவது முதல் 24 பந்துகளில் 42 ரன்கள், அடுத்த 20 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். பின்னர் டு பிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடியதால், 212 ரன்கள் அடித்தது ஆர்சிபி.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் விராட் கோலி, நடுவில் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடியதால் ஆர்சிபி அணி குறைந்த ஸ்கொரை எட்டியது. இன்னும் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் தோல்வியை தழுவி இருக்கிறது என்று சாடியுள்ளார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல். அவர் கூறுகையில்,

- Advertisement -

“விராட் கோலி கடந்த போட்டிகளில் இல்லாத அளவிற்கு, இப்போட்டியில் மின்னல் வேகத்தில் ஆரம்பித்தார். 24 பந்துகளில் 42 ரன்கள் எட்டிய பிறகு 8 ரன்கள் அடித்து அரைசதம் பூர்த்தி செய்ய கிட்டத்தட்ட 10 பந்துகளை எடுத்துக் கொண்டார். அணியை முன்னிறுத்தி விளையாடாமல் சொந்த ரெக்கார்டுக்காக விளையாடுவது போல் தெரிந்தது.

டி20 மாதிரியான போட்டிகளில் அதற்கு சற்றும் இடமில்லை. தனது அதிரடியான ஆட்டத்தை அப்படியே எடுத்துச் சென்றிருக்க வேண்டும். எதற்காக நடுவில் நிதானமாக விளையாடினார். அதுதான் பெரிய ஸ்கொரை எட்டமுடியாமல் தடுத்துள்ளது. அணியின் தோல்விக்கு வித்திட்டுள்ளது.” என்று கடுமையாக சாடினார்