கலர் கலரான ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி செய்யும் இந்திய அணி ; காரணம் என்ன?

0
414
Ict

நாளை மறுநாள் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதி இருக்கிறது!

கடந்த மாதம் 29ஆம் தேதி 16 வது ஐபிஎல் சீசன் முடிய, அதற்கு முன்பாகவும் பின்பாகவும் நான்கு கட்டங்களாக இந்திய அணி இங்கிலாந்துக்கு பயணப்பட்டு முகாம் அமைத்திருக்கிறது!

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்தில் சூழ்நிலைக்குப் பழகவும், பயிற்சி மேற்கொள்ளவும் கிடைத்த நாட்களில் இந்திய அணியினர் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக இந்திய அணியினர் ஃபீல்டிங் பயிற்சி செய்யும் பொழுது கலர் கலரான ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி செய்து வருகிறார்கள். ஏன் இப்படியான முறையில் பயிற்சி செய்யப்படுகிறது என்று தேடும் பொழுது சில தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம்.

பலமான காற்று வீசக்கூடிய மேலும் குளிர்ச்சியான தன்மையைக் கொண்ட இடத்தில் பீல்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. இங்கு பந்து அதிகமாக காற்றில் தள்ளாடும். இந்தக் காரணத்திற்காக கலர் கலரான ரப்பர் பந்துகள் ஃபீல்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து சூழ்நிலையில் பந்து காற்றில் தள்ளாடும். மேலும் இங்கிலாந்து சூழ்நிலையில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். இதனால் பேட்ஸ்மேன்களிடமிருந்து பந்து நிறைய எட்ஜ் எடுத்து வரும். இவற்றைக் கூர்ந்து கவனித்துப் பிடிப்பதற்காகவே பல வண்ண பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பலவண்ண பந்துகள் எடையில் மிகவும் குறைவானவை. இதனால் இயல்பாகவே இங்கிலாந்து சூழ்நிலையில் பந்து காற்றில் அதிகம் தள்ளாடுகிறது. இதை வைத்துப் பயிற்சி செய்யும் பொழுது ஆட்டத்தில் பந்தைப் பிடிப்பதற்கும் தடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.

பந்து பிடிக்கப்படும் கடைசி நேரத்தில் பார்வையில் இருந்து விலகுவது இயல்பானது. மேலும் காற்றில் தள்ளாடி வரும் பந்தின் பாதை எதுவென்று தீர்மானிக்க பந்தின் பல வண்ணங்கள் பயன்படுகிறது!