நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறைய தோல்விகள் அடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை இப்போதே தயார் படுத்தி விட்டது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த வருடம் விளையாடுவது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் வினோதமான பதிலை கூறியிருக்கிறார்.
பதினெட்டாவது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஆக்ஷனில் மோசமான வீரர்களை தேர்வு செய்து தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வந்தது. இதற்கு இடையில் அணியின் கேப்டன் ருத்ராஜ் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தினார். அணியின் பிரச்சனையை உடனடியாக புரிந்து கொண்ட தோனி, காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்று வீரர்கள் என்ற அடிப்படையில் திறமையான வீரர்களை வாங்கி அணியை நன்றாக கட்டமைத்து விட்டார்.
இதில் கேப்டன் ருத்ராஜ் அடுத்த சீசனில் களம் இறங்கினால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை என இரண்டும் வலுவான நிலைக்கு எட்டி விடும். இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஸ்டீபன் பிளமிங் வினோதமான பதிலை கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் சிஎஸ்கே அணி குறித்து பிளம்பிங் கூறும் போது ” அடுத்த வருடம் எம்எஸ் தோனி விளையாடுவது குறித்து எனக்கு தெரியாது. சென்னை அணிக்கு சவாலாக இருந்த இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் வேகத்தில் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தோம். எனவே இளம் வீரர்களை அறிமுகப்படுத்த அணியை மீண்டும் உருவாக்கி நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோம் என்பது பற்றிய தத்துவத்தை மீண்டும் உருவாக்கி அல்லது உறுதிப்படுத்தும் போது இவர்கள் அனைவரும் நிச்சயமாக எதிர்காலத்திற்கான வரிசையில் உள்ளனர்.
இதையும் படிங்க:என்ன பேச்சு இது.. இப்படி ஒரு விஷயம் விராட் கோலிக்கு யாராச்சும் செய்ய முடியுமா.? கங்குலி திட்டவட்ட மறுப்பு
எனது கருத்து எப்போதுமே இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாக இருந்து வருகிறது. நான் அனுபவத்தின் ரசிகன் அனுபவம் தான் போட்டிகளை வெல்லும். ஆனால் இந்த சமயத்தில் இளைஞர்களும் புறக்கணிக்க முடியாத காரணிகளாக இருக்கிறார்கள்” என அவர் பேசி இருக்கிறார். மேலும் எம்எஸ் தோனி குறித்து பிளம்மிங் எனக்கு தெரியாது என்ற பதிலை அளித்திருப்பது ரசிகர்களிடம் சுளிக்க வைத்திருக்கிறது.