டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் உலகில் இன்னும் பேசு பொருளாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி விராட் கோலியின் ஓய்வு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த விராட் கோலி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அளவுக்கு விராட் கோலியின் உடல் தகுதி இருக்கும் நிலையில் தானாகவே முடிவெடுத்து விராட் கோலி இதை அறிவித்தாரா? அல்லது பிசிசிஐயின் தூண்டுதலின் பேரில் இது நிகழ்ந்ததா? என்ற சந்தேகம் நிலவுகிறது.
இந்த விவாதம் தற்போது பெரிதாக இருக்கும் நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்த சௌரவ் கங்குலி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார். விராட் கோலி சொந்தமாக முடிவெடுக்காமல் இப்படி ஒரு பெரிய அறிவிப்பை அறிவிக்க வாய்ப்பே இல்லை என கங்குலி கருதுகிறார். அதேபோல டெஸ்ட் கேப்டன் அறிவிப்பு சாதாரணமான விஷயம் இல்லை எனவும் பல கண்ணோட்டங்களில் இதனை ஆராய வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.
இது சாதாரண விஷயம் இல்லை
இதுகுறித்து கங்குலி கூறும் போது “விராட் கோலியின் முடிவு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அது அவரது சொந்த முடிவாக இல்லாமல் யாராவது விளையாட்டை விட்டு வெளியேற முடியுமா? அதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என்று தான் கூறுவேன். ஆனால் இது ஒரு அற்புதமான வாழ்க்கையாகும். இந்த முடிவு ரோகித் சர்மாவிற்கும் நிச்சயம் பொருந்தும். இவர்கள் இருவரும் நம்ப முடியாத ஒரு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டிருந்தனர். மேலும் இந்திய டெஸ்ட் கேப்டன் குறித்து தேர்வாளர்கள் தங்களது புரிதலின்படி முடிவெடுப்பார்கள்.
இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. சிஎஸ்கே செஞ்ச இந்த வேலையை சன்ரைசர்ஸ் ஒருபோதும் செய்யாது.. வாய்ப்பே இல்ல – ஆகாஷ் சோப்ரா பேட்டி
கேப்டன் பதவியை பொறுத்தவரை நிறைய சிந்திக்க வேண்டும். இது ஒரு நீண்ட கால சிந்தனையாகும். ஜஸ்பிரித் பும்ராவை பற்றி நிறைய பேசுகிறார்கள். அவர் கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவரது காயங்கள் குறித்து நிறைய கவலைகள் இருக்கின்றன. எனவே நாம் எல்லாவற்றையும் ஒன்றாக சிந்திக்க வேண்டும்” என்று கங்குலி கூறியிருக்கிறார்.






