மொயின் அலி விட்ட கேட்ச் இல்ல.. சிஎஸ்கே தோல்விக்கு உண்மையான காரணம் இதுதான் – ஸ்டீபன் பிளமிங் அதிரடி பேட்டி

0
5943

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாங்கள் சில விஷயங்களை செய்யத் தவறியதே எங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. சென்னை அணி பேட்டிங் செய்த பொழுது ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. தொடக்கம் முதலே சென்னை அணியின் பேட்ஸ்மேன்களால் சீரான ரன்வேகத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

- Advertisement -

முன்னணி பேட்ஸ்மேன்களே ரன்கள் குவிக்க தடுமாறிய நேரத்தில், ஆல்ரவுண்டர் சிவம் துபே மட்டும் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 45 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்தார். மேலும் மற்ற வீரர்கள் ரகானே 30 பந்துகளில் 35 ரன்களும், ஜடேஜா 23 பந்துகளில் 33 ரன்களும் குவிக்க சென்னை அணி 165 ரன்கள் குவித்தது.

166 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பவர் பிளேவிலேயே சென்னை அணையின் வெற்றியை ஏறக்குறைய பறித்து விட்டனர். அந்த அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவிற்கு இந்திய அணியில் எதிர்காலம் காத்திருக்கிறது. 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் மூணு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 37 ரன்கள் விளாசினார்.

ஸ்டீபன் பிளமிங் பேட்டி

பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 31 ரன்களும் மார்க்ரம் 50 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணியின் தோல்விக்கு பிறகு 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்தது தவறாகி விட்டது என்று பயிற்சியாளர் பிளம்மிங் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது
“நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது முதல் 10 ஓவர்கள் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது.

- Advertisement -

ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியினர் பந்து வீசிய விதம் அவர்களுக்கான மதிப்பை கொடுத்தாக வேண்டும். 180 முதல் 190 ரன்கள் வரை எடுக்க முயற்சித்தோம். ஒருவேளை பின்னோக்கிப் பார்க்கும் பொழுது இந்த மைதானத்தில் 190 ரன்கள் வரை குவிப்பது சாத்தியம்தான் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையில் சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 முதல் 6 ஓவர்களில் எங்களை முடக்கியது.

இதையும் படிங்க:வித்தியாசமான மண் இது.. நான் அவருக்கு மட்டும் பௌலிங் போட விரும்பல – வெற்றிக்குப் பின் பேட் கம்மின்ஸ் பேட்டி

நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக இருந்திருக்கலாம். நாங்கள் பந்து வீசும் போது முதல் பத்து ஓவர்கள் கடினமாக இருக்கும் என்று தெரியும். எனவே நேர்மறையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினோம்.முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட்டுக்கு மொயின் அலி தவற விட்ட கேட்ச் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. ஆனால் போட்டியில் கிடைக்கும் கடினமான வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். நாங்கள் நன்றாக போராடினோம். நீங்கள் பந்து வீச சரியான வேகத்தினை பெற்றவுடன், ஆடுகளம் சற்று தந்திரமாக பேட்டிங்க்கு சாதகமாக மாறியது போல் இருந்தது” என்று கூறி இருக்கிறார்.