இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ஏன் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
இந்த முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை லக்னோ அணி 27 கோடி ரூபாய் கொடுத்து மிக அதிகபட்ச தொகைக்கு ஐபிஎல் வரலாற்றில் வாங்கியது. இதற்கு அடுத்த அதிகபட்ச தொகையாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
நான் மீண்டும் இணைய ஆசைப்பட்டேன்
இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “நான் மீண்டும் இணைந்து ஸ்ரேயாஸ் ஐயருடன் வேலை செய்வதற்கு ஆசை பட்டேன். நீண்ட காலமாக டெல்லி அணியில் நாங்கள் இருந்த பொழுது எங்களுக்குள் ஒரு நல்ல நட்புணர்வு இருந்தது. நான் வேலை செய்த சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்”
“அவர் ஐபிஎல் தொடரை வென்றிருக்கும் கேப்டன். அவரிடம் தற்போது நீங்கள் அதிகமாக எதையும் கேட்க முடியாது. அவர் முகாமில் சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கிறது. எனவே அவர் கேப்டனாகவும் வீரராகவும் அணியில் முத்திரை பதிக்க தொடங்கி இருக்கிறார். நாங்கள் ஒரு சிறந்த அணியாக ஒருங்கிணைந்திருக்கிறோம். உங்களுக்கே தெரியும் ஒரு அணியில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உறவு நல்ல முறையில் அமைய வேண்டும்”
என்னை சிறந்தவராக உணர வைத்தார்
இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது “நான் அவருடன் முதன் முறையாக பணிபுரிந்த பொழுது அவர் என்னை ஒரு சிறந்த வீரராக உணர வைத்தார். என்னால் இந்த வடிவத்தில் சிறந்து விளங்க முடியும் என்று நம்ப வைத்தார். அவர் கொடுக்கும் நம்பிக்கை என்பது எப்பொழுதும் வேறு லெவலில் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே மேட்ச்.. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவா? – ஹர்திக் பாண்டியா வெளிப்படையான பதில்
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருடனும் இணைந்து வேலை செய்திருக்கிறார். இதில் ஆரம்பத்திலேயே ரிஷப் பணத்துக்கு கேப்டன் பதவி கொடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் மீண்டும் ரிஷப் பண்ட்டை ஒதுக்கிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயரை யாரும் எதிர்பார்க்காத விலைக்கு வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!






