இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவதற்கு என்ன மாதிரியான வழிமுறையை கடைபிடிக்க இருப்பதாக இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் துவக்கமாக இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைகிறது. இரண்டு அணிகளுக்குமே சீசனின் முதல் தொடர் என்பதால் வெற்றி பெற வேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே இரண்டு அணிகளும் இதற்கான தீவிரமான தயாரிப்பில் இறங்கி இருக்கின்றன.
பத்திரிக்கையாளர் சந்திப்பு யூகங்கள்
நேற்று இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்னால் சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பும்ரா மூன்று டெஸ்ட் மட்டுமே விளையாடுவார் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்படவில்லை என்கின்ற முக்கியமான விஷயத்தை தெரிவித்தார். அதாவது வெற்றி தான் முக்கியம் தேவைப்பட்டால் 5 டெஸ்ட் விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதே போல இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயரின் திறமையும் அனுபவமும் மிகவும் முக்கியமானதாக அமையும் என்றும் கூறினார். இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டியிலேயே விளையாடுவதற்கான வாய்ப்பு கருநாய்ருக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆயிரம் ரன்கள் உதவாது
மேலும் இந்திய அணியின் பவுலிங் யூனிட் எவ்வாறு அமையும் என்பது குறித்து கவுதம் கம்பீர் பேசியிருக்கிறார். ஏனென்றால் இரண்டு சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் வேகப் பந்துவீச்சாளர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட்ல பும்ராவ சமாளிக்க இந்த வழி இருக்கு.. ஏற்கனவே அந்த ரெண்ட வச்சு நல்லா தயார் ஆயிட்டேன் – ஜேமி ஸ்மித் பேச்சு
இது குறித்து பேசி இருக்கும் கம்பீர் கூறும் பொழுது ” நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் 20 விக்கெட் கைப்பற்றினால் நிச்சயம் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. எனவே நாங்கள் யாரை தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், கண்டிஷனுக்கு தகுந்தவாறு முடிவு செய்யப் போகிறோம். ஏனென்றால் ஐந்து மைதானங்களிலும் ஐந்து விதமான கண்டிஷன் இருக்கும். கண்டிஷன்தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்று கூறியிருக்கிறார்.






