இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா சவாலாக இருப்பார் எனவும் ஆனால் அவரை தன்னால் சமாளிக்க முடியும் எனவும் இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் இளம் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த மாதம் ஜூன் இருபதாம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்திய வீரர்கள் பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் இருந்த நேரத்தில், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கான வீரர்கள் இந்திய தொடருக்கு மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகிறார்கள்.
அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட்
இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கடந்த வருடத்தில் ஜேமி ஸ்மித் விக்கெட் கீப்பர் இடத்துக்கு கொண்டுவரப்பட்டார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மிகச்சிறப்பான முறையில் விளையாடியிருந்தார். பேட்டிங் வரிசையில் ஆறு அல்லது ஏழாம் இடத்தில் வந்து அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்து அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடியவராக இருக்கிறார்.
இவருடைய பேட்டிங் பாணியை வைத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களே இவரை ஆடம் கில்கிறிஸ்ட் என்று கூறி வருகிறார்கள். பேட்டிங் வரிசையில் கீழே திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் ஆக இவர் இருப்பதால் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பார் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொடர்கள் உதவியது
“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. ஏனென்றால் மேல் வரிசையில் பந்து புதியதாக இருக்கும் பொழுது நன்றாக ஸ்விங் ஆகி வந்தது. இது எனக்கு டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. இதற்கடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சியாக அமைந்தது. இந்திய தொடருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்வதில் நாங்கள் இறுதி கட்டத்தை எட்டி விட்டோம்”
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டி20.. 13 பேரே போதும் இங்கிலாந்து அணி அறிவிப்பு.. ஆர்சிபிக்கு ஸ்பெஷல் சலுகை
“நான் மிகவும் நல்ல முறையில் தயாராகி விட்டேன். இன்னும் பத்து நாட்கள் அல்லது அதற்கு மேலும் மிகவும் சிறப்பான முறையில் செல்லும் என்று நான் நம்புகிறேன். என்னால் இந்தியத் தொடருக்கு மிகவும் புத்துணர்ச்சியுடன் செல்ல முடியும். எங்களுக்கு பும்ரா சவாலாக இருப்பார். ஆனால் நான் ஏழாவது இடத்தில் களமிறங்குவதால், அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் பார்த்து விட முடியும். எனவே அவரை சந்திப்பதற்கு எனக்கு திட்டங்கள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






