இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் வெளியில் இருந்து கேப்டன் சூரிய குமாருக்கு ஆலோசனைகள் தருவது இந்திய முன்னால் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் இர்பான் பதான் ஆகியோரை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.
நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் இந்திய அணி பந்து வீசிய பொழுது களத்திற்கு வெளியில் இருந்த பயிற்சியாளர் கம்பீர் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு ஒவ்வொரு ஓவரிலும் ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தது, இந்திய கிரிக்கெட்டில் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.
கேப்டன் கேம்
கிரிக்கெட்டை பொருத்தவரையில் கால்பந்து போல பயிற்சியாளர் விளையாட்டாக இல்லாமல் கேப்டனின் விளையாட்டாகவே இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் களத்திற்கு வெளியில் இருந்து பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை ஓவருக்கு ஓவர் சொல்லி வருவதை பார்த்திருக்கிறோம். ஆனாலும் அதுவே தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி என்று வரும்பொழுது பயிற்சியாளர் தலையீடு எப்பொழுதும் பெரிதாக இருந்தது கிடையாது. நேற்று கம்பீர் வெளிப்படையாகவே வரும் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபேவை பந்துவீச்சுக்கு கொண்டு வர கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டு இருந்ததை வீடியோவில் பார்க்க முடிந்தது. இது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இந்திய முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா மற்றும் இர்பான் பதனை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.
டெல்லி வீரர்களின் சேட்டை
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “கம்பீர் என்ற பிசியாக இருந்தார். அவர் வெளியில் இருந்து நிறைய அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருந்தார். ஒரு சுழல் பந்துவீச்சாளரை பந்துவீச்சுக்கு கொண்டு வரும்படி கூறினார். ஒரு கால்பந்து அணியின் மேனேஜர் போல அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அக்சர் படேலை அனுப்பினது ஓநாய் கிட்ட தூக்கி போட்ட மாதிரி.. அது ஒரு மோசமான முடிவு – டேல் ஸ்டெய்ன் விமர்சனம்
கம்பீரின் தலையீடு குறித்து பேசிய இர்பான் பதன் கூறும்பொழுது ” நான் இரண்டு டெல்லி வீரர்களை கவனித்திருக்கிறேன். ஒன்று ஆசிஸ் நெக்ரா அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இப்படித்தான் செய்து கொண்டிருப்பார். தற்போது இன்னொரு டெல்லி வீரரான கம்பீர் இந்திய அணிக்கு இப்படி செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






