வாஷிங்டன் சுந்தரை இதுக்காகவே கொண்டு வந்தேன்.. எங்க திட்டம் இதுதான் – கோச் கம்பீர் விளக்கம்

0
898
Sundar

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் திடீரென சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்து பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார்.

நாளை நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் திடீரென அழைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது குறித்தும் கம்பீர் பேசி இருக்கிறார்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தரின் கடைசி ரஞ்சி போட்டி

வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணிக்கு அழைக்கப்படுவதற்கு முன்பாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் வந்து 150 ரன்கள் எடுத்தார். மேலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. தற்போது அவர் இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடது கை வீரர்களாக இருப்பதால் ஆப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

அவரைக் கொண்டு வந்ததற்கு காரணம் இதுதான்

இதுகுறித்து பதில் அளித்த கம்பீர் கூறும் பொழுது ” நியூசிலாந்து அணியில் பிளேயிங் லெவலில் மூன்று அல்லது நான்கு இடதுகை வீரர்கள் இருக்கிறார்கள். எனவே எங்கள் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியில் எடுத்துச் செல்லும் ஸ்பின்னர் ஒருவர் இருப்பது நல்லது என உணர்ந்தோம். அவரால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல கண்ட்ரோலில் இருக்க முடியும். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறார்”

இதையும் படிங்க : நீங்க முடிவு பண்ணாதிங்க.. எனக்கு கேஎல் ராகுல் வேணும்.. டிராலாம் பண்ண முடியாது – கம்பீர் கோபம்

“வாஷிங்டன் சுந்தர் ஒரு தரமான வீரர் என்பது எங்களுக்கு தெரியும். மேலும் அவர் மேசைக்கு என்ன கொண்டு வருகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். நாளை அவர் விளையாடினால் நல்ல ஒரு பரிணாமத்தை கொண்டு வருவார். எங்களுக்கு நல்ல கண்ட்ரோலையும் தருவார். மேலும் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அக்சர் படேல் மற்றும் மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோரும் இருக்கிறார்கள். நாளை ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து முடிவு செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -