நீங்க முடிவு பண்ணாதிங்க.. எனக்கு கேஎல் ராகுல் வேணும்.. டிராலாம் பண்ண முடியாது – கம்பீர் கோபம்

0
523
Gambhir

இந்திய அணியின் பிளேயிங் லெவனை சமூக ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது எனவும் அங்கு கருத்து சொல்பவர்களை பற்றி கவலை இல்லை எனவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.

நாளை மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதி இருக்கிறது. நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார்.

- Advertisement -

கேஎல்.ராகுல் தொடர்வாரா?

இது குறித்து கம்பீர் கூறும் பொழுது “எங்களுடைய பிளேயிங் லெவனை சமூக ஊடகங்கள் முடிவு செய்ய முடியாது. சமூக ஊடகங்கள் அல்லது நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் கிடையாது. கேஎல்.ராகுல் கடினமான கான்பூர் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பெரிய ரன் அடிக்க விரும்புகிறார். நாங்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல்.ராகுல் விளையாடுவதை பயிற்சியாளர் கம்பீர் உறுதிப்படுத்தி இருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இது நடக்கும் என்றால் சதம் அடித்த சர்பராஸ் கான் வெளியே இருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம். எனவே அடுத்தடுத்த நாட்களில் நிறைய சர்ச்சைகள் உருவாகலாம்.

- Advertisement -

டிரா எல்லாம் சலிப்பானது

மேலும் பேசிய கம்பீர் கூறும் பொழுது “தற்போது கில் சிறந்த டச்சில் இருக்கிறார். தற்போது நாங்கள் விளையாடும் அணியை முடிவு செய்யவில்லை. நாளைதான் நாங்கள் அதை முடிவு செய்வோம். நாங்கள் எந்த விளையாடும் அணியை முடிவு செய்தாலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள்”

இதையும் படிங்க : ஷமி இடத்துக்கு ஆகாஷ் தீப் வேண்டாம்.. இந்த 22 வயசு பையன கொண்டாங்க.. எங்க நாட்டுல கலக்குவாரு – பிரெட் லீ நம்பிக்கை

“மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வர வர டிராக்கள் பெரிய சலிப்பை உண்டாக்கக்கூடியதாக இருக்கிறது. டி20 கிரிக்கெட் பெரிய ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரா என்பதை ரசிகர்கள் விரும்புவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -