இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜோ ரூட் தலைமையில் 2022 முடிவு வரை மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. ஆஸ்திரேலியாவில் வைத்து ஆசஸ் தொடரில் படுதோல்வி அடைந்தது.
மேலும் சொந்த நாட்டிலும் பெரிய வெற்றிகள் எதையும் பெற முடியாமல், சுற்றுப்பயணம் செய்யும் அணிகளிடம் எல்லாம் தோல்வி அடைந்து கொண்டு இருந்தது. ஜோ ரூட் தவிர பேட்டிங்கில்ஒருவர் கூட சரியாக செயல்படவில்லை.
இந்த நேரத்தில்தான் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் மற்றும் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் கொண்டுவரப்பட்டார்கள்.
இந்தக் கூட்டணி இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து, டெஸ்ட் கிரிக்கெட்டை எல்லா நேரங்களிலும் ஒருநாள் கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடுவது என முடிவு செய்து வெற்றிகரமாக விளையாடியது.
மேலும் இங்கிலாந்தில் இவர்களுக்கு கிடைத்த பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை போலவே, பாகிஸ்தானிலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் கிடைத்தது. எனவே இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று அசத்தியது. இதனால் அவர்களது அதிரடி டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.
இந்த நிலையில் தான் இந்தியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒரு போட்டி மீதம் இருக்கும் பொழுதே இங்கிலாந்து அணி இழந்து இருக்கிறது. பாஸ் பால் முறையில் இங்கிலாந்து அணி தோற்ற முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பயிற்சியாளர் மெக்கலம் ” ஒல்லி ராபின்சன் பேட்டிங் செய்யும்பொழுது அவருக்கு முதுகில் கொஞ்சம் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் அவர் பந்துவீச்சில் வேகத்தை குறைக்க வேண்டியதாக இருந்தது. மேலும் இதனால்தான் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச கொண்டுவரப்படவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக ஏமாற்றம் அடைந்ததில் அவர்தான் அதிக ஏமாற்றத்தை அடைந்தவராக இருப்பார். அவரிடமிருந்து சிறந்ததை கொண்டு வருவதற்கான வழிகளை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இதையும் படிங்க : பிசிசிஐ அதிரடி.. மும்பை அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் தமிழ்நாடு அணிக்கு சிக்கல்
நாங்கள் ஆசஸ் தொடரை இங்கிலாந்தில் வெல்லவில்லை. அதேபோல் இந்தியாவில் தற்பொழுது தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால் நாங்கள் 18 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட நல்ல அணியாகவே தற்பொழுதும் இருக்கிறோம். அடுத்த 18 மாதங்களில் நாங்கள் இன்னும் முன்னேறி வருவோம். இங்கிலாந்து பயிற்சியாளராக இருப்பதற்கு இது மோசமான காலம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.