“கண்ண மூடுனா.. இந்த இந்திய வீரர் உலக கோப்பையை வாங்கி தரதுதான் வருது!” – ஆஸ்திரேலியா லெஜன்ட் ஆச்சரியப் பேச்சு!

0
745
ICT

இந்திய அணி வீரர்கள் மற்றும் நிர்வாகம், மேலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என ஒட்டுமொத்தமாக இந்தியத் தரப்புக்கு, நடப்பு உலகக் கோப்பை தொடர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தொடராக அமைந்திருக்கிறது.

இந்திய அணியில் காயத்தில் இருந்த முன்னணி வீரர்கள் எல்லோரும் காயம் குணமடைந்து அணிக்குள் வந்ததும், இந்திய அணியின் வலிமை உச்சத்திற்கு சென்று இருக்கிறது. மூன்று துறைகளிலும் இந்திய அணி நம்பிக்கையுடன் செயல்படுகிறது.

- Advertisement -

இதன் காரணத்தால் எதிரணிகள் போட்டியை கையில் கொண்டு வர முடியாமல் திணறுகின்றன. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய அணி பேட்டிங் அல்லது பந்துவீச்சில் போட்டியை தன் பக்கம் கொண்டு வந்து விடுகிறது.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆரம்பகட்டத்தில் பெரிதாக விக்கெட்டுகள் வீழ்த்தாமல் இருந்தால், அடுத்து வரக்கூடிய இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கொண்டு வந்து, மீண்டும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களைத் தாக்குதலில் கொண்டு விடுகிறார்கள். மொத்தமாக சேர்ந்து எதிரணியை முடக்கி போடுகிறார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங் என்று வரும் பொழுது ஆரம்பத்தில் இரண்டு மூன்று விக்கெட்டுகள் இழந்தாலும், இடையில் வரக்கூடியவர்கள் பொறுப்பாக விளையாடி சரியான ரன்களுக்கு செல்கிறார்கள். மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் தாக்குதல் பாணியைக் கடைப்பிடித்து வருகிறார். அவருடைய நாளாக இருக்கும் பட்சத்தில் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விடுகிறார்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “குல்தீப் யாதவ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு பார்க்கிறேன். நேற்றைய போட்டியில் அவருக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் எல்லோருக்கும் தங்களை நிரூபிப்பதற்கான புள்ளி இருக்கிறது.

முகமது சிராஜை நான் சிறந்த போட்டியாளராக கருதுகிறேன். ஆனால் அவர் வெளிச்சத்திற்கு வர விரும்புவது கிடையாது. அதுதான் அவருடைய மந்திரம். சரி அசலங்கா போன்ற ஒரு இளம் வீரரிடம் சென்று அவர் பேசுகிறார். இது இந்திய கிரிக்கெட் அணுகுமுறை கிடையாது. இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணுகுமுறை!” என்று கூறியிருக்கிறார்!