தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்துள்ள சிறந்த டி20 அணி

0
299
Chris Morris

சமீப சில நாட்களாகவே முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அனைத்து காலத்திற்கும் ஏற்ப சிறந்த ஒரு அணியை ( டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான ) தேர்ந்தெடுப்பது வழக்கமான விஷயமாகிவிட்டது. அதன் வரிசையில் தற்பொழுது தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வீரர் கிறிஸ் மோரிஸ் டி20 போட்டிகளுக்கான ஒரு சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார்.

ஓபனிங் வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கிறிஸ் கெய்ல்

டி20 போட்டிகளை பொறுத்தவரையில் மிகச் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். டி20 போட்டிகளில் பாஸ் கிறிஸ் கெய்ல் 453 போட்டிகளில் விளையாடி 14,321 ரன்கள் குவித்திருக்கிறார். மறுபக்கம் ரோஹித் ஷர்மா 364 டி20 போட்டிகளில் விளையாடி 9779 ரன்களை ரோஹித் ஷர்மா குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒன் டவுன் வீரராக ஏபி டி வில்லியர்ஸ்

ஓபனிங் வீரர்களை தொடர்ந்து ஒன் டவுன் வீரராக மிஸ்டர் 360° ஏபி டிவில்லியர்ஸ் இடம் பெற்றிருக்கிறார். டி20 போட்டிகளில் 340 போட்டிகளில் விளையாடி 9424 ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் வீரர்களாக விராட் கோலி கீரோன் பொல்லார்ட் மற்றும் மகேந்திர சிங் தோனி

மிடில் ஆர்டர் வரிசையில் விராட்கோலி, கீரோன் பொல்லார்ட் மற்றும் மகேந்திர சிங் தோனி கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்துள்ளார். 324 டி20 போட்டிகளில் விளையாடி 10,204 ரன்களை விராட் கோலி குவித்திருக்கிறார். 573 டி20 போட்டிகளில் விளையாடி 11326 ரன்கள் கீரோன் பொல்லார்ட் குவித்திருக்கிறார்.

இந்த அணிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்துள்ள மகேந்திர சிங் தோனி 347 டி20 போட்டிகளில் விளையாடி 6935 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆல்ரவுண்டர் வீரர்களாக ஹர்திக் பாண்டியா மாற்றும் சுனில் நரைன்

ஆல்ரவுண்டர் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா 175 டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 2797 ரன்களும், பந்துவீச்சில் 110 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மறுபக்கம் சுனில் நரைன் 383 டி20 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 2767 ரன்களையும் பந்துவீச்சில் 425 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா மற்றும் பிரெட் லீ

கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்துள்ள பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா 191 டி20 போட்டிகளில் விளையாடி 237 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லசித் மலிங்கா 295 டி20 போட்டிகளில் விளையாடி 390 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த வரிசையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ 120 டி20 போட்டிகளில் விளையாடி 109 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் தேர்வு செய்த அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சிறந்த டி20 அணி

ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, கிரோன் பொல்லார்ட், மகேந்திர சிங் தோனி(C&WK), ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன்,ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா மற்றும் பிரெட் லீ