சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தோனி பற்றிய சர்ச்சை
ஐபிஎல் தொடரின் மகத்தான கேப்டனாக விளங்கும் மகேந்திர சிங் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு இதுவரை 5 ஐபிஎல் பட்டங்களை வெல்ல முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக தனது கேப்டன் பதவியை விட்டு விலகிய நிலையில், அவர் தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் விளையாடிய சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிறகு தோனி களம் இறங்கியதால் அவர் மீது பெரிய விமர்சனம் எழுந்தது. அந்த போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை தோல்வி அடைந்ததால், அவரது பேட்டிங் குறித்து சொந்த ரசிகர்களே அவர் மீது விமர்சனங்களை வைத்தனர். இந்த சூழ்நிலையில் கெயில் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கருத்து
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “தோனி ஐபிஎல் தொடருக்கு பெரிய மதிப்பை கொண்டு வருகிறார். எனவே ரசிகர்கள் அவர் முடிந்தவரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். தோனி களம் இறங்கும் போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் பெரிய அளவில் இருக்கும்போது இப்போது அவருடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து ரசிகர்கள் கூறும் விமர்சனங்கள் அவருக்கு தவறான செய்தியை அனுப்பக்கூடும். ஐபிஎல் தொடரில் அவர் பெரிய மதிப்பை கொண்டு வருவதால் தோனி போன்ற ஒருவருக்கு இது போன்ற செய்தியை அனுப்புவது சரியல்ல. பலமுறை சாம்பியன்ஷிப் வென்ற ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினால் அது சரிவை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க:ரிஷப் பண்ட் அவர் இஷ்டத்துக்கு செய்றாரு.. ஆனா ஒரு கேப்டனா அவர் இதை புரிஞ்சு நடக்கணும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை
தோனி தனது உரிமையாளர் அணிக்காக செய்து வருவது அற்புதமானது. சிஎஸ்கே இந்தியாவில் எங்கு விளையாடினாலும் அது விசில் போடுவது பற்றியது. அதுதான் ஒரு சக்தி, அதுதான் தோனி ஐபிஎல்லுக்கு கொண்டு வருகிறார். அவர் விக்கெட் கீப்பிங் இப்போது கூட மிகவும் கூர்மையாக உள்ளது. எனவே அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் 11 வது இடத்தில் களம் இறங்கி விளையாடினாலும் மக்கள் தோனியை பார்க்கும் வரை அவர் சிஎஸ்கேவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என்று கெயில் கூறியிருக்கிறார்.






