ரிஷப் பண்ட் அவர் இஷ்டத்துக்கு செய்றாரு.. ஆனா ஒரு கேப்டனா அவர் இதை புரிஞ்சு நடக்கணும் – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

0
74

ஐபிஎல் 2025 கிரிக்கட் லீக் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா லக்னோ அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

லக்னோ அணியின் பிரச்சனை

கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி இவரை அதிக விலை கொடுத்து வாங்கி கேப்டனாக நியமித்தது. மேலும் லக்னோ அணியில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்த கேஎல் ராகுல் டெல்லி அணிக்காக வாங்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியும் பெற்று மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது.

லக்னோ அணியை பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் மிச்சல் மார்ஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ரிஷப் பண்ட் மற்றும் மார்க்ரம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கருத்து

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இரண்டு விஷயங்கள் லக்னோ அணியை சிந்திக்க வைக்க வேண்டும் ஒன்று அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம். அவர் தொடக்க வீரராக இரண்டு ஆட்டத்தில் சிறப்பாக செயல்படவில்லை. இது அவருக்கு மூன்றாவது போட்டி. அவருக்கு பதிலாக மற்றொரு வீரரான பிரீட்ஸ்க் வெளியே அமர்ந்திருக்கிறார். எனவே இவருக்கு பதிலாக லக்னோ அணி அவர் குறித்து சிந்திக்க தொடங்கலாம். எனவே அவருக்கு இந்த போட்டி கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:பஞ்சாப் வீரர்களுக்கு இந்த விஷயமே தெரியாது.. அதனால நீங்க இதைதான் செய்யணும்.. பாண்டியா சொன்னதாக அஸ்வானி குமார்

மற்றொன்று இரண்டாவது விஷயம் கேப்டன் ரிஷப் பண்ட். பல நிபுணர்கள் அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் நான் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் நான்காவது இடத்தில் வருகிறார் ஆனால் இது முக்கியமில்லை. எந்த இடத்தில் இறங்கினாலும் ரன்கள் எடுக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம். அப்போதுதான் நீங்கள் மரியாதையை பெறுவீர்கள். உங்கள் வீட்டை ஒரு கோட்டையாக மாற்ற விரும்பினால் அதற்கு கேப்டன் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -