டி20க்கு கில்லை எடுப்பது.. ஸ்ரீகாந்தை விட்டு கவாஸ்கரை எடுப்பது மாதிரி.. பெரிய சந்தேகமே வந்துச்சு – டபுள்யுவி ராமன் கருத்து

0
11
Gill

இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்வது சரியானது இல்லை என இந்திய மற்றும் தமிழ்நாடு முன்னாள் வீரர் டபிள்யூவி.ராமன் தெரிவித்திருக்கிறார்.

தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இந்த உலகக் கோப்பைக்கு நடுவில் ஒரே ஒரு டி20 தொடர் இருக்கும்பொழுது தேர்வுக்குழு எடுத்திருக்கும் இந்த தைரியமான முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கில்லை நீக்கியது இதனால்தான்

தற்போது சுப்மன் கில் நீக்கப்பட்டிருப்பது இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் நடக்காத விஷயமாக அமைந்திருக்கிறது. மேலும் கம்பீர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவை கடைசி போட்டியில் வெளியில் வைத்திருந்தார். தற்போது இந்த அதிரடியான அணுகுமுறை பெரிய வீரர்களுக்கும் பயத்தை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து டபுள்யுவி.ராமன் கூறும் பொழுது ” கில் ஒரு குறிப்பிட்டதக்க தவறுக்காக அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் அவரைச் சுற்றி விளையாடக்கூடிய மற்ற வீரர்கள் அவரை விட அதிரடியாக விளையாடுவதுதான். தற்போது டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அதிரடியாக விளையாடுகிறீர்கள் என்பது ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது”

- Advertisement -

கவாஸ்கரை தேர்வு செய்வது போல

“இந்திய டி20 அணியில் கில்லை தேர்வு செய்வது என்பது ஒரு கற்பனையாக எடுத்துக் கொண்டால் ஸ்ரீகாந்தை விட்டுவிட்டு கவாஸ்கரை தேர்வு செய்வதுபோல. மேலும் அவரைவிட அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருக்கும் பொழுது, இவரை அணிக்குள் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் துணை கேப்டனாகவும் ஏன் ஆக்கினார்கள்? என்பது எனக்கு பெரிய சந்தேகமாக இருந்தது”

இதையும் படிங்க : கம்பீர் அகர்கர் இந்திய கிரிக்கெட்ட பின் தங்க வச்சுட்டாங்க.. இந்த 2 வீரர்கள் இருந்திருக்கணும் – முகமது கைப் பேச்சு

“தற்போது நான் அவருடைய பயிற்சியாளராக இருந்திருந்தால் விளையாட்டில் உணர்வுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்திருப்பேன். அவர் ஒரு சிறிய வீரராக தற்பொழுது மாறிவிட்டார் என ஒரு நொடி கூட நினைக்கக் கூடாது என்று கூறியிருப்பேன். இது அணி காம்பினேஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முடிவு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -