சஞ்சு சாம்சன், ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை இந்த இரண்டு பேர் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் – சேத்தன் சர்மா!

0
1521

சமீபத்தில் இந்திய அணையின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா மீது ரகசியமாக ஆபரேஷன் ஒன்றை நடத்தியது ஜி நியூஸ் நிறுவனம். ஜித்தன் சர்மா பேசியதை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்து அதனை வெளியேவும் விட்டு இருக்கிறது இதனால் பல்வேறு சர்ச்சைகள் பிசிசி மீதும் இந்திய அணியின் மீதும் எழுந்துள்ளது.

வெளிவந்த இந்த வீடியோ ஆதாரத்தில் பிசிசிஐ மற்றும் இந்திய அணி இடையே நடந்து வரும் வெளி வராத பல தகவல்களை சேத்தன் சர்மா உளறியுள்ளார். குறிப்பாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.

- Advertisement -

விராட் கோலி-கங்குலி இடையே நடந்த சச்சரவு, கேப்டன் பொறுப்பு துறப்பு, நடுவில் வந்து ரோகித் சர்மாவின் பெயர் மற்றும் அணி வீரர்கள் பயன்படுத்திய ஸ்டெராய்டு ஊசிகள், முழு உடல் தகுதி இல்லாமல் இந்திய வீரர்கள் விளையாட வைக்கப்பட்ட விதம் என அனைத்தையும் பற்றி சேத்தன் சர்மா பேசியது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும் இளம் வீரர்கள் பலரை நான் இந்திய அணிக்குள் கொண்டு வந்திருக்கிறேன் என்று பெருமிதமாகவும் பேசினார். அத்துடன் முன்னணி துவக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அவர் பேசியது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

சுப்மன் கில் மற்றும் இசான் கிஷன் இருவரும் அடுத்தடுத்து இரட்டை சதம் அடித்ததால் தவான், சஞ்சு சாம்சன் இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது. கே எல் ராகுலும் மோசமான பார்மில் இருக்கிறார். அடுத்தடுத்த தொடர்களுக்கு அவர் இருப்பாரா? என்பதே சந்தேகம்தான்.

- Advertisement -

கில் மூன்று வித போட்டிகளிலும் ஓப்பனிங் செய்து வருகிறார். இதுவும் கேஎல் ராகுல் மற்றும் சிக்கர் தவான் இரண்டு பேருக்கும் சிக்கல். ரிஷப் பண்ட் இல்லாததால் இஷான் கிஷன் முன்னணி கீப்பராக இருக்கிறார். சூரியகுமார் மூன்று வித போட்டிகளிலும் ஆடுகிறார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் என்றும் சேத்தன் சர்மா பேசியது வீடியோ காட்சியில் தெளிவாக இருக்கிறது.

இதை வைத்துப் பார்க்கையில் இனி சஞ்சு சாம்சன் மற்றும் சிக்கர் தவான் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்புவது இயலாத காரியமாகவும் மாறிவிட்டது.

மேலும் அந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, உமேஷ் யாதவ் ஆகியோர் அடிக்கடி தனது வீட்டிற்கு வந்து செல்வார்கள் என்றும், ஹர்திக் பாண்டியா கூடுதல் உரிமையை எடுத்துக் கொண்டு பழகுவார் என்றும் சேத்தன் சர்மா கூறியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவிற்கு இப்படித்தான் கேப்டன் பொறுப்பு கிடைத்ததா? என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.