ஐசிசி ரேங்கிங்.. டெஸ்டில் ஜோ ரூட் நம்பர் 1.. டி20ல் வாஷிங்டன் சுந்தர் 6 இடம் உயர்வு.. பல இந்திய வீரர்கள் முன்னேற்றம்

0
1437

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் டி20 தர வரிசையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக பல இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இது தவிர இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆட்டம் சமனில் முடிந்தாலும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய வீரர்களும் டி20 தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி மூன்று ஆட்டங்களில் மொத்தமாக 80 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலம் டி20 தர வரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 73 ரன்கள் குவித்து 16 இடங்கள் முன்னேறி 21வது இடத்தை பிடித்திருக்கிறார். டி20 பேட்ஸ்மேன்களில் ட்ராவிஸ் ஹெட் முதல் இடத்திலும், சூரியகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். பந்து வீச்சாளர்களை பொருத்தவரை இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட லெக்ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் டி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தொடரில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் எட்டு இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இந்திய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை அர்ஸ்தீப் சிங் நான்கு இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்திலும், வாஷிங்டன் சுந்தர் ஆறு இடங்கள் முன்னேறி 40 ஆவது இடத்தையும், முகமது சிராஜ் 47-வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

இரண்டு போட்டிகளில் மொத்தமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கையின் பத்திரானா 13 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்திருக்கிறார். ஆல் ரவுண்டர்கள் பட்டியலை பொருத்தவரை ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆள்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டானிஸ் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஹஸரங்காவுக்கு பதிலாக தற்போது முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஹசரங்கா இரண்டாவது இடத்தில் சரிந்து இருக்கிறார்.

இதையும் படிங்க:சூர்யா அந்த வேலையை மாஸா பண்ணிட்டாரு.. நான் கிளம்புறேன் ஆனா நீங்க விட்றாதிங்க – ஹர்திக் பாண்டியா பேச்சு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 291 ரன்கள் குவித்த ஜோ ரூட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் கேன் வில்லியம்சனை வீழ்த்தி நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.. இந்த பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா 751 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் ஆறாவது இடத்திலும், ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திலும், விராட் கோலி பத்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -