ஸ்டிங் ஆப்ரேஷன் எதிரொலி.. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.. சேத்தன் சர்மா தலையில் இடியை தூக்கிப்போட்ட பிசிசிஐ! என்ன நடந்தது? – ரிப்போர்ட்!

0
918

பிசிசிஐ மற்றும் இந்திய அணி மத்தியில் நடந்த தகவல்கள் பற்றி சேத்தன் சர்மா பேசியது பொதுவெளியில் வந்ததால் அவருக்கு தடை விதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது.

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக இருந்து வந்த சேத்தன் சர்மா டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தேர்வுக்குழு தலைவர் பதவி மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் சேத்தன் சர்மா பங்கேற்றார். இறுதியாக அனுபவம் மற்றும் தகுதி அடிப்படையில் சேத்தன் சர்மா இரண்டாவது முறையாக தேர்வுக்குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

இவர் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது தான் விராட் கோலி மற்றும் கங்குலி இடையே நடைபெற்ற பனிப்போர் காரணமாக விராட் கோலி அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அவர்களுக்கு இடையில் உண்மையில் என்ன நடந்தது? ரோஹித் சர்மா-விராட் கோலி இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்திய அணியின் வீரர்கள் ஸ்டெராய்டு பயன்படுத்தியது ஏன்? மற்றும் முன்னணி வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை இளம் வீரர்கள் வைத்து தலைகீழாக மாற்றியது ஆகியவை பற்றிய தகவல்களை ரகசிய கேமரா இருப்பது தெரியாமல் உளறியுள்ளார்.

இதன் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி தற்போது பிசிசிஐ மற்றும் இந்திய அணியில் மத்தியில் இருந்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிட்டது. இதனால் சேத்தன் சார்மா மீது பிசிசிஐ அதிர்ச்சியில் இருக்கிறது. ரகசியம் காக்க தவறியதால் விரைவில் இவருக்கு தடை விதிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இந்திய அணியினர் எவரும் சேத்தன் சர்மாவிடம் உறவு வைத்துக்கொள்ள தயங்குகின்றனர். ஏனெனில் அவர்கள் மீதான நம்பிக்கை உடைந்துவிட்டது. ரகசியங்களை பேசி அது இப்படி பொதுவெளியில் வந்துவிட்டது. இனி யாரும் இவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை.” என கூறினார்.

- Advertisement -

மற்றொரு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது தேர்வுக்குழு தலைவர் ஒரு ஓரமாகவும், ராகுல் டிராவிட், விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் தனியாகவும் பயிற்சி செய்து வந்ததை பார்க்க முடிந்தது. அதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வுக்குழு தலைவரிடம் எவ்வளவு விலகியுள்ளனர் என்பது. அவருடன் நெருக்கமான நட்பு இல்லை எனில் எப்படி சரியான முடிவுகள் எடுக்க முடியும். அது அணிக்கு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும். இவை அனைத்தும் பிசிசிஐ கவனத்தில் கொண்டு வருகிறது புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்.” கூறினார்.